உலகப் புள்ளியியல் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகப் புள்ளியியல் நாள்
World Statistics Day
நாள்20 அக்டோபர்
நிகழ்வுஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை

உலகப் புள்ளியியல் நாள் (World Statistics Day) என்பது புள்ளிவிவரங்களின் முக்கியத்துவத்தினைக் கொண்டாடும் ஒரு பன்னாட்டுக் கொண்டாட்ட நாளாகும். ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையத்தால் இந்நாள் ஆரம்பிக்கப்பட்டது.[1] இந்நாள் முதன் முதலில் 2010 அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்நாள் கொண்டாடப்படுகிறது.[2]

2010 தரவுகளின் படி, 103 நாடுகள் தேசிய புள்ளியியல் நாளைக் கொண்டாடுகின்றன. இதில் 51 ஆப்பிரிக்க நாடுகள் கூட்டாக ஆண்டுதோறும் நவம்பர் 18 அன்று ஆப்பிரிக்கப் புள்ளியியல் நாளைக் கொண்டாடுகின்றன.[3] புள்ளியியல் வல்லுநர் பிரசாந்த சந்திர மகாலனோபிசின் பிறந்த நாளான சூன் 29 அன்று இந்தியா தனது புள்ளிவிவர நாளைக் கொண்டாடுகிறது.[4] இங்கிலாந்தில் உள்ள அரச புள்ளியியல் சமூகம் இதே நாளில் 20:10 மணிக்கு (20 அக்டோபர் 2010 அன்று) புள்ளியியல் கல்வியறிவு பிரச்சாரத்தைத் தொடங்கியது.[5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. World Statistics Day
  2. "World Statistics Day". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-13.
  3. "United Nations Statistics Division".
  4. ""Statistics Day" will be celebrated on 29th June, 2018".
  5. http://www.getstats.org.uk
  6. "World Statistics Day | Statistics". statistics.unwto.org (in ஆங்கிலம்). Archived from the original on 2018-10-14. பார்க்கப்பட்ட நாள் 2018-10-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகப்_புள்ளியியல்_நாள்&oldid=3593710" இலிருந்து மீள்விக்கப்பட்டது