பயனர் பேச்சு:Selvasivagurunathan m/மணல்தொட்டி/தங்க. ஜெய்சக்திவேல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க. ஜெய்சக்திவேல்
படிமம்:Jaisakthivel.jpg
பிறப்புதங்கவேல் ஜெய்சக்திவேல்
1978
பெரியாத்துக் கள்ளிவலசு, திருப்பூர்
தேசியம்இந்தியத் தமிழர்
அறியப்படுவதுஉதவிப் பேராசிரியர், ஊடகவியலாளர், வானொலி ஆர்வலர்
பெற்றோர்பழனிசாமி தங்கவேல்
கெளசல்யா

தங்கவேல் ஜெய்சக்திவேல் (அல்லது தங்க. ஜெய்சக்திவேல் Thangavel Jaisakthivel பி: 21 சூன் 1978) வானொலித் துறையில் கொண்ட பற்றினால் வானொலி தொடர்பான படிப்பினைப் படித்து பிபிசி உலக சேவையில் பணியாற்றியவர். சென்னைப் புதுக்கல்லூரியில் காட்சி சார் அறிவியல் (Visual Communication) துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்பொழுது [1] வானொலியின் மாணவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்தார். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில், இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியினைத் தொடர்கின்றார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலூக்காவில் உள்ள பெரியாத்துக் கள்ளிவலசு என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். அப்பா பழநிசாமி தங்கவேல், அம்மா கெளசல்யா. சகோதரர் தங்க. சிவராஜ்.

கல்வி[தொகு]

உலக வானொலி தினத்தையொட்டி சென்னை பல்கலைக் கழக இதழியல் தொடர்பியல் துறை ஒரு கருத்தரங்கு நடாத்தியது. பேராசிரியர் தங்க. ஜெய்சக்திவேல் உரையாற்றுகிறார். - 13 பெப்ரவரி 2015

தனது பள்ளிக் கல்வியை பொன்னு மெட்ரிகுலேசன் பள்ளியிலும், என். சின்னசாமி பிள்ளை மேல் நிலைப் பள்ளியிலும் முடித்தார். உடுமலைப்பேட்டை அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டமும் முடித்தார். சர்வதேச வானொலி மீது கொண்ட பற்றினால் முதுகலையில் “வெளிநாட்டுத் தமிழ் வானொலிகள்” என்ற தலைப்பில் ஆய்வினை செய்துள்ளார்.
எம்.பில் (M.Phil) க்கான ஆய்வினை சென்னையில் உள்ள வளாகச் சமுதாய வானொலிகளை மையப்படுத்தியும், முனைவர் பட்டத்துக்கான ஆய்வினை திண்டுக்கல்லில் ஒலிபரப்பாகும் பசுமை பண்பலை சமுதாய வானொலியை மையப்படுத்தியும் செய்துள்ளார்.[2]

வானொலி ஆர்வம்[தொகு]

தனது இளமைப் பருவத்தில் தகப்பனாரின் வழிகாட்டுதலின் படி வானொலித் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் போது இந்தியாவின் பொதுத் துறை வானொலியான அகில இந்திய வானொலி கோவை நிலையத்தில் இளைய பாரதம், ஊர்ப்புறத்திலே போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பல உலக வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பதிலும் அந்த நிலையங்களோடு தொடர்பு கொள்வதிலும் ஆர்வம் காட்டினார்.[3]

வானொலிப் பணி[தொகு]

- 13 பெப்ரவரி 2015[தெளிவுபடுத்துக]

கோயம்புத்தூர் அகில இந்திய வானொலியில் ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சிகளை சக நேயராக வழங்கி வந்தவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது சென்னை அகில இந்திய வானொலியின் ரெயின்போ பண்பலையில் வண்ணக் களஞ்சியம் எனும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆனார்.[சான்று தேவை] இதற்கு காரணமாக இருந்தவர் முனைவர் சேயோன் ஆவார்.[further explanation needed] அதன் பின் என். சி. ஞானப்பிரகாசம்[further explanation needed] (பக்கத்திலுள்ள படத்தில் இடமிருந்து நான்காவதாக காணப்படுகிறார்) அவர்கள் தயாரித்து வழங்கிய சினிமா நேரம் எனும் நிகழ்ச்சியில் எட்டு வருடங்கள் நிகழ்ச்சித் தயாரிப்பில் உதவியாளராகப் பணியாற்றினார்.[சான்று தேவை]

வானொலி ஒலிபரப்புகள் தொடர்பான செய்திகளையும் தகவல்களையும் மாணவர்கள் மற்றும் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இரண்டு இணைய இதழ்களை வெளியிட்டு வருகிறார். தமிழில் "சர்வதேச வானொலி" என்ற பெயரில்[4][நம்பகமற்றது ] 2006ஆம் ஆண்டு தொடக்கமும், ஆங்கிலத்தில் "டி. எக்ஸேர்ஸ் கைடு" (DXers Guide) என்ற பெயரில்[5] 2005 ஆம் ஆண்டு தொடக்கமும் இந்த இதழ்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.[6][நம்பகமற்றது ]

தற்பொழுது அமெச்சூர் வானொலியிலும் பங்காற்றி வருகிறார். இவரது அழைப்புக் குறியீடு VU3UOM. [7] வானொலியின் முக்கியத்துவத்தினை கல்லூரி மாணவர்களுக்கும் எடுத்துக் கூறிவருகிறார். இவரது பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ எனும் புத்தகம் [8] இடம்பெற்றுள்ளது. தமிழின் முக்கியப் பதிப்பகமான பாரதி புத்தகாலயத்தின் இணைய இதழான புக்டே இதழில் ஹாம் ரேடியோ பற்றி ஒரு நெடுந்தொடர் எழுதி வருகிறார். ஹாம் ரேடியோ பற்றி ஒன்றுமே அறிந்திராதவர்களுக்காக [9] என்ற புத்தகத்தினையும் எழுதியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகிவரும் வேரித்தாஸ் வானொலிக்காக 300 பக்கங்கள் கொண்ட [10] என்ற புத்தகத்தினையும் தொகுத்துள்ளார். தற்பொழுது [11] நடத்துவது எப்படி என்ற பயிற்சியினை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்திவருகிறார். இவர் எழுதிய பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி புத்தகத்தினை இலங்கையின் புகழ்பெற்ற நாளிதழான [12] ஒரு நீண்ட கட்டுரையை எழுதியுள்ளது.

சமீப காலமாக [13] எனப்படுத் அஞ்சல் அட்டை பகிர்வு தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். மாணவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வினை [14] ஊடாக வழங்கி வருகிறார். [15] ஊடாக வரலாற்றினையும் ஆவணப்படுத்தி வருகிறார். உலக நாடுகளில் உள்ள அனைத்து [16] குறித்தும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார். அஞ்சல் அட்டைகள் குறித்த ஆவணப்படத்தினையும் தயாரித்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]