பக்த துளசிதாஸ் (1947 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்த துளசிதாஸ்
இயக்கம்பி. எஸ். ரங்கா
தயாரிப்புவிக்ரம் ஆர்ட் புரடக்சன்சு
இசைஅனில் பிசுவாஸ்
நடிப்புபி. என். ராஜ ஐயங்கார், லட்சுமி சங்கர், சி. வி. வி. பந்துலு, மாஸ்டர் கரூட், ஜோக்கர் ராமுடு, பேபி துளசி
ஒளிப்பதிவுபி. எஸ். ரங்கா
வெளியீடு1947
நீளம்12168 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பக்த துளசிதாஸ் 1947 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்காவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜ ஐயங்கார், லட்சுமி சங்கர் உட்படப் பலர் நடித்திருந்தனர்.[1]

கதைச்சுருக்கம்[தொகு]

அத்தினாபுரத்தில் வாழும் இராம பக்தர் ஆத்மாராமின் (மாஸ்டர் கரூட்) கனவில் இராமர் தோன்றி "இராமாயணத்தைத் தமிழில் இயற்றுவதற்காக வால்மீகியே உன் மகனாகப் பிறப்பார்," என்று சொல்லி மறைகிறார். இதன்படி ஆத்மாராமுக்கு துளசிதாஸ் (பி. எஸ். ராஜா அய்யங்கார்) என்ற மகன் பிறக்கிறான். சிற்றன்னையின் கொடுமைக்கு ஆற்றாது ஓடி வந்து விட்ட தாசி மமதாவின் மகள் ரத்னாவை (லட்சுமி சங்கர்) கோவிலில் சந்திக்கும் ஆத்மாராம் அவளை தம் வீட்டுக்குக் கூட்டி வந்து தனது பெண்ணாக வளர்க்கிறார். சிறு வயதிலேயே துளசிதாசும், இரத்னாவும், தங்களை இராமனும் சீதையுமாகப் பாவித்துப் பழகி வருகின்றனர். அவர்கள் பெரியவர்களான போது காதலர்களாகிறார்கள்.[1]

இராமாயணத்தை இயற்றுவதற்காகப் பிறந்த தன் மகன் மோகவலையில் சிக்கி விட்டானே எனக் கவலையுற்ற ஆத்மாராம் முடிவில் ரத்னாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அவரின் வேண்டுகோளின் படி, ரத்னா துளசிதாசை நிராகரித்து விட்டு, சந்நியாசனியாகக் காலம் கழிக்கிறாள். துளசிதாசும் ஊரூராகத் திரிந்து விட்டு காசியில் தங்கியிருந்த போது துளசிதாசை சிவபக்தராக்க முயன்ற பட்டேசுவரரின் (சி. வி. வி. பந்துலு) வெறுப்புக்கு ஆளாகிறார். பட்டேசுவரரின் மாணவரான ராமசாத்திரியும் (ஜோக்கர் ராமுடு) ராமபக்தனாகிறார்.[1]

துளசிதாஸ் இராமாயணம் இயற்றி வருகிறார். இதற்கிடையில் ரத்னா துளசிதாஸ் அறியாவண்ணம் அவருக்கே பணிவிடை செய்து வருகிறாள். காசி ஜாகிர்தாரின் கோபத்திற்கு ஆளாகி சிறை சென்று மீண்டு வருகிறார் துளசிதாஸ். இராமாயணம் அரங்கேறுகிறது. துளசிதாசை அவமானப்படுத்த முயன்ற பட்டேசுவரர், துளசிதாசைக் கொலை செய்ய ஓர் ஆளை ஏவி விடுகிறார். அவன் தவறுதலாக பட்டேசுவரரின் மகனைக் கொன்று விடுகிறான். பட்டேசுவரர் தனது தவறுகளை உணர்கிறார். துளசிதாசின் பிரார்த்தனைக்கு இணைங்கி பகவான் பட்டேசுவரரின் மகனை உயிர்ப்பிக்கிறார். துளசிதாஸ் ரத்னாவையும் இறுதியில் அறிந்து கொள்கிறார்.[1]

சில பாடல்கள்[தொகு]

  • கருணாநிதி போல் (லட்சுமி சங்கர்)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "பக்த துளஸிதாஸ்". பேசும் படம்: பக். 21-23. சூலை 1948.