சூட்டு வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூட்டு வம்ச மன்னர் மூலானந்தன் வெளியிட்ட ஈய நாணயம்

சூட்டு வம்சம் (Chutu dynasty) (கன்னடம்: ಚುಟು) தென்னிந்தியாவின் தற்கால கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டப்பகுதிகளை கி பி மூன்றாம் நூற்றாண்டில் ஆண்ட சிற்றரசர்கள். சூட்டு வமிசத்தவர்கள் வனவாசி நகரத்தை தலைநகரமாக கொண்டிருந்தனர். சூட்டு வமிசத்தவர்கள் சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாக விளங்கியவர்கள் .இவர்கள் ஆரம்பகலத்தில் பல்லவருடன் திருமண உறவு கொண்டிருந்தனர் இவ்வம்ச மன்னர் மூலானந்தன் பெரும்பாலும் ஈயத்திலான நாணயங்களை வெளியிட்டார்.[1] சிவலானந்தனே சூட்டு நாக வம்சத்தின் கடைசி அரசனாவான் இவன் கிபி 285ல் வாகாட அரசன் பரசவசேனிடம் நாட்டின் வட பகுதிகளை இழந்தான் பின் விஜயகந்த வர்மன் என்ற பல்லவனிடம் கிபி290 ல் தோற்க சூட்டு நாகரின் ஆட்சி முடிவுக்கு வந்தது

முக்கிய மன்னர்கள்[தொகு]

  • சூட்டு குலானந்தன் (கி பி 225 – 246)
  • மூலானந்தன் (கி பி 246–275)
  • சிவாலானந்தன் (கி பி 275–290 )

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூட்டு_வம்சம்&oldid=3245702" இலிருந்து மீள்விக்கப்பட்டது