உக்கோ டெய்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெய்மன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Salmoniformes
குடும்பம்:
Salmonidae
பேரினம்:
Hucho
இனம்:
H. taimen
இருசொற் பெயரீடு
Hucho taimen
Peter Simon Pallas - Pallas, 1773

உக்கோ டெய்மன் (Hucho taime, Siberian taimen அல்லது Siberian salmon) என்பது உலகின் நன்னீர் மீன்களில் பெரியது. இரண்டு மீட்டருக்கும் மேல் வளரக் கூடியது. பெரும்பான்மையான மீன்களின் நீளமானது, 70 முதல் 120 செ. மீ. ஆகும். இதன் எடையானது, 15-30 கி. கி. கொண்டதாகக் காணப்படுகிறது.[1] மங்கோலியாவில் அதிகம் இருக்கிறது. ஏனெனில், அவர்கள் மதக்காரணங்களுக்காக மீன்கறியை அதிகம் உண்பதில்லை என்பதால் பெரிய மீன்கள் அங்கு அழியாமல் இருக்கிறது. டைய்மன் என்றே அதிகம் அழைக்கப்படுகிறது. 1943 ஆம் ஆண்டு இரசியாவில் 105 கிலோ கிராம் எடையும், 210 செ. மீ. நீளமும் உள்ள கண்டறியப்பட்ட இவ்வகை மீனே, இம்மீனினங்களில் பெரியது ஆகும்.[2] இந்த மீனினத்தின் வாழ்நாள் ஏறத்தாழ 55 வருடங்கள் ஆகும். இது மற்ற மீன் இனங்களை, உண்டு வாழும்(piscivores) இயல்புடையது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கோ_டெய்மன்&oldid=3235171" இலிருந்து மீள்விக்கப்பட்டது