கயா (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயா
திட்ட வகைவிண்வெளி நோக்காய்வுக்கலம்
இயக்குபவர்ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
இணையதளம்sci.esa.int/gaia/

கயா (ஆங்கிலத்தில் Gaia) ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் (ESA ) வடிவமைக்கப்பட்ட வானியலுக்கான விண்வெளி ஆய்வுக்கலம்[1]. இத்திட்டத்தின் நோக்கம் ஒரு பில்லியன் வானியல் பொருட்களை உள்ளடக்கி மிக பிரமாண்ட முப்பரிமாண அட்டவணையோன்றை உருவாக்குவது. வானியல் பொருட்களில் முக்கியமாக நட்சத்திரங்கள், கிரகங்கள், அத்துடன் வால்மீன்கள், சிறுகோள்கள், துடிப்பண்டம் மற்றும் இன்னபல வானியல் பொருட்கள். கயா விண்கலம் ஒவ்வொரு நட்சத்திரனையும் 70 தடவைகள் 5 ஆண்டு காலப்பகுதியில் அவதானித்து அவற்றின் பால் வழி சார்பான இயக்கத்தை துல்லியமாக அளவிடும். அத்துடன் கயா சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள வியாழன் போன்ற பல ஆயிரம் கிரகங்களையும், 500 000 துடிப்பண்டங்களையும், சூரிய குடும்பத்திலுள்ள பல ஆயிரம் சிறுகோள்கள் வால்மீன்கள் கண்டறியும்.

கயா 2013 டிசம்பர் 19 சோயுஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டது[2]. இது தற்போது சூரியன்-பூமி L2 லெக்ராஞ்சியப் புள்ளியை சுற்றி செயட்படுகிறது[3].

கயா என்ற பெயர் ஆங்கிலத்தில் "வானியற்பியலுக்கான அகில வானளவையியல் குறுக்கீட்டுமானம்” என்பதின் குறுக்கமாகும், இது இத்திட்டத்தில் பயன்படுத்தப்படவிருந்த ஒளியியல் குறுக்கீட்டுமண தொழில்நுட்பத்தை பிரதிபலிப்பு. திட்டத்தை நடைமுறை படுத்தும்போது வேறு தொழில்நுட்ப முறைகள் அடையாளங்காணப்பட்டது, எனினும் திட்டத்தின் தொடர்ச்சிக்காக கயா என்ற பெயர் தொடர்ந்தது.

பால் வழி மண்டலத்தின் 180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்த கயா தொலைநோக்கி[தொகு]

நமது பால் வழி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களைக் கணக்கிட்டு பட்டியலிடும் பணிகள் மேற்கொள்ளும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் கயா விண்வெளித் தொலைநோக்கியின் உதவியோடு தயாரித்த நட்சத்திரப் பட்டியலில் இதுவரை 180 கோடி விண்மீன்கள் எண்ணி அடையாளம் காணப்பட்டுள்ளன. [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கயா_(விண்கலம்)&oldid=3075116" இலிருந்து மீள்விக்கப்பட்டது