குப்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குப்யாவை அணிந்துள்ள கொடவர் இன இளைஞர்கள்
குப்யாவை அணிந்துள்ள கொடவர் இன இளைஞர்கள்

குப்யா என்பது கொடவர் இன ஆண்கள் அணியும் உடை. கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த கொடவர், திருமணக்காலத்திலும் இறப்பு நிகழ்ச்சிகளிலும் வெள்ளை நிற குப்யா ஆடையையும், மற்றோர் கருப்பு நிற குப்யாவையும் அணிகின்றனர். இந்த உடை கோட் போன்ற அமைப்பில், கால் முட்டி வரை நீண்டிருக்கும்.[1] இந்த ஆடை பருத்தியில் நெய்யப்பட்டதாகும். இன்றைய கொடவர் இன ஆண்கள் கருப்பு நிற குப்யா ஆடையை வெள்ளை நிற முழுக்கை சட்டைக்கு மேல் அணிகின்றனர். தலைப்பாகையும், இடுப்பில் குப்யாவின் மேல் சிவப்பு நிற துண்டையும் கட்டுகின்றனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்யா&oldid=2120932" இலிருந்து மீள்விக்கப்பட்டது