வடமொழிப் புராணங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடமொழிப் புராணங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  • தமிழில் மேல்கணக்கு நூல்கள் 18, கீழ்க்கணக்கு நூல்கள் 18 என்னும் பாகுபாடு உள்ளது. இந்தப் பகுப்பு காலத்தால் முந்தியது. இதனைப் பின்பற்றிப் பிற்காலத்தில் புராணங்களையும் 18 18 ஆகப் பாகுபாடு செய்துள்ளனர்.
  • வடமொழியிலுள்ள புராணங்களின் தொகை இங்கு வகைப்படுத்திக் காட்டப்படுகின்றன.

மகாபுராணம் 18[தொகு]

சிவபுராணம் 10

மச்சம், கூர்மம், வராகம், வாமனம், சிவமகா புராணம்
இலிங்கம், பவிணியம், காந்தம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் (வாயவியம்)

விஷ்ணு புராணம் 4

விஷ்ணு புராணம், பாகவதம், வருடம், நாரதீயம்

பிரம புராணம் 2

பிரமம், பத்மம்

அக்கினி புராணம் 1

ஆக்கினேயம்

சூரிய புராணம் 1

பிரமவைவர்த்தம்
  • இந்த 18-ல் காலத்தால் முந்திய முதல் 7

கால வரிசையில்

  1. வாயு புராணம் (பிரமாண்ட புராணம்)
  2. மார்கண்டேயம்
  3. விஷ்ணு புராணம்
  4. மச்ச புராணம்
  5. பாகவத புராணம்
  6. கூர்ம புராணம்
  7. சிவமகா புராணம்
  • 18-ல் காலத்தால் பிந்திய 11

கால வரிசையில்

  1. வாமணம்
  2. இலிங்கம்
  3. வராகம்
  4. பத்மம்
  5. நாரதீபம்
  6. அக்கினி
  7. காருடம்
  8. பிரமம்
  9. ஸ்காந்தம்
  10. பிரமவைவர்த்தம்
  11. பவிஷ்ய புராணம்

உப புராணங்கள் 18[தொகு]

  • கூர்ம புராணத்தில் உள்ளபடி
  • இவற்றின் காலம் கி. பி. 650 – 800
  • வேறு பட்டியியல்களில் வேறு நூல்களும் காட்டப்படுகின்றன.
  • புராணங்கள் நூற்றுக்கணக்கானவை எனவும் கூறப்படுகிறது
  1. சனற்குமாரம்
  2. நாரசிங்கம்
  3. நந்தி
  4. நிச்சுவாசம்
  5. சிவதருமம்
  6. நாரதீயம்
  1. காபிலம்
  2. மானவம்
  3. ஔசனம்
  4. வாசிட்டலைங்கம்
  5. வாருணம்
  6. காளிகம்
  1. சாம்பேசம்
  2. அங்கிரம் (பிரமாண்டம்)
  3. சௌரம்
  4. பராசரம்
  5. மாரிசம்
  6. பார்க்கவம்

அதி புராணங்கள் 18[தொகு]

  1. ஆதிகம்
  2. இலக்குமி
  3. கர்க்கம்
  4. கல்கி
  5. சண்டி
  6. சவோத்திர ரூபம்
  1. தேவி சரிதம்
  2. பசுபதி
  3. பரானந்தம்
  4. பவிஷ்யோத்திரம்
  5. பார்க்கவம்
  6. பிருகத் தருமம்
  1. பிருகத் வாமனம்
  2. பிருகத் மாத்ஸ்யம்
  3. பிருகத் நாரதீயம்
  4. மகா பாகவதம்
  5. முத்கலம் (விநாயக புராணம்)
  6. வசிட்டம்
  • இவற்றின் பெயர்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இவற்றையும் காண்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005