புலிச்சுவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலிச்சுவடி
புலிச்சுவடி மொட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Solanales
குடும்பம்:
Convolvulaceae
பேரினம்:
Ipomoea
இனம்:
Ipomoea pes-tigridis
இருசொற் பெயரீடு
Ipomoea pes-tigridis
L.

புலிச்சுவடி (Ipomoea pes-tigridis) என்பது இப்போமியா குடும்ப கொடித்தாவரம் ஆகும். இது ஆசியா, ஆப்பிரிக்கா, அவுத்திரேலியா உள்ளிட்ட பல பசுபிக் தீவுகளில் காணப்படுகிறது.

ஏறக்குறைய இதய வடிவம் கொண்ட, ஐந்து இதழ்கள் கொண்ட இதன் இலை 6-10 செ.மீ வளரக்கூடியது. இதில் மயிர் போன்ற அமைப்பு காணப்படும். இதன் ஐந்து இதழ் அமைப்பு புலியின் பாதச்சுவடு போன்று காணப்படுவதால் இதற்கு புலிச்சுவடி (tiger's paw) என்ற பெயர் கிடைத்தது. இதன் பூக்கள் வெள்ளையாகவும், 4 செ.மீ நீளமுடையதுமாகும். மாலை நான்கு மணிக்கு மலரும் இதன் பூக்கள் மறுநாள் காலையில் உதிர்ந்துவிடும்.[1]

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ipomoea pes-tigridis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Tiger Foot Morning Glory". பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிச்சுவடி&oldid=2456278" இலிருந்து மீள்விக்கப்பட்டது