ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை வாரியம்
அமைவிடம்
5050 யோங்கே சாலை, ரொறன்ரோ, ஒன்றாரியோ, M2N 5N8
கனடா
மாவட்டத் தகவல்
நிறுவப்பட்டதுசனவரி 1, 1998
(7 வாரியங்களின் ஒருங்கிணைப்பு மூலமாக)
மேற்பார்வையாளர்கள்20 (பகுதிகள்)
2 (மாற்று மற்றும் முதியோர் திட்டங்கள்)
பள்ளிகள்451 துவக்கநிலைப் பள்ளிகள்
105 உயர்நிலைப் பள்ளிகள்
5 முதியோர் கல்வி நிலையங்கள்[1]
நிதிநிலை அறிக்கை~CA$3 பில்லியன் (2016-2017)[2]
மாவட்ட குறியீடுB66052
மாணவர்களும் ஆசிரியர்களும்
மாணவர்கள்188,304 துவக்கநிலை மாணவர்கள்
87,273 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்
14,000 முதியவர் கல்வி மாணவர்கள்[3]
பிறத் தகவல்கள்
வாரியத் தலைவர்இராபின் பில்கே
கல்வி இயக்குநர்யோன் மல்லாய் (பொறுப்பில்)
தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள்22
மாணவ அறங்காவலர்கள்2
வலைத்தளம்www.tdsb.on.ca/languages/ta-in/home.aspx
நோர்த் யோர்க்கில் 5050 யோங்கே சாலையில் அமைந்துள்ள ரொறொன்ரோ மாவட்ட பள்ளிச்சாலை வாரியக் கல்வி மையம் ரொறோன்ரோ மாவட்டப் பள்ளிச்சாலை வாரியத்தின் தலைமையிடமாக விளங்குகின்றது.

ரொறோன்ரோ மாவட்டப் பள்ளிச்சாலை வாரியம் (Toronto District School Board, TDSB; தமிழக வழக்கு: டோரொன்டோ மாவட்டப் பள்ளிக்கல்வி வாரியம், 1999க்கு முன்பாக ஆங்கில-மொழி பொது மாவட்டப் பள்ளி வாரியம் எண். 12[4]) கனடாவின் ஒன்றாரியோ மாநிலத்தில் ரொறன்ரோவிலுள்ள ஆங்கில மொழி சமயச் சார்பற்ற பொதுநிலைப் பள்ளிச்சாலை வாரியமாகும். இந்த வாரியத்தைத் தவிர இதே பகுதியில் சிறுபான்மையினருக்காக பொதுநிலை-சமயச் சார்பற்ற பிரான்சிய மொழி (கான்சில் இசுகூலேர் வயமாண்டே), பொதுநிலை-சமயச் சார்பு ஆங்கில மொழி (ரொறொன்ரோ கத்தோலிக்க மாவட்டப் பள்ளிச்சாலை வாரியம்), மற்றும் பொதுநிலை-சமயச் சார்பு பிரான்சிய மொழி (கான்சில் இசுகூலேர் தெ டிஸ்ட்ரிக்ட் கத்தோலிக்கு சென்டர்-சுத்) பள்ளிகளும் அவற்றின் வாரியங்களும் அரசுநிதி பெற்று நடத்தப்படுகின்றன. இதன் தலைமையிடம் நோர்த் யோர்க்கில் உள்ளது.[5] இந்த வாரியம் கனடாவின் மிகப் பெரிய பள்ளிச்சாலை வாரியமாகவும் வட அமெரிக்காவில் நான்காவது பெரிய பள்ளிச்சாலை வாரியமாகவும் விளங்குகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Facts and Figures". Toronto District School Board. Archived from the original on 2013-05-22. பார்க்கப்பட்ட நாள் 2006-06-08.
  2. http://www.tdsb.on.ca/AboutUs/BusinessServices/BudgetsandFinancialStatements/201617Budget.aspx
  3. Connelly, Gerry (2006). "The 2004-05 Financial Results" (PDF). Director's Annual Report,2004-05. Archived from the original (PDF) on 2007-06-19. பார்க்கப்பட்ட நாள் 2006-06-08.
  4. "Ontario Regulation 107/08". e-Laws. Government of Ontario. பார்க்கப்பட்ட நாள் 15 April 2014.
  5. "5050_2.gif பரணிடப்பட்டது 2011-07-06 at the வந்தவழி இயந்திரம்." () Toronto District School Board. Retrieved on March 12, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]