லட்சுமி குபேர பூஜை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லட்சுமி குபேர பூசை என்பது நிலைத்த செல்வம் பெறுவதற்கு இந்துக்கள் செய்கின்ற பூசையாகும். இந்த பூசையில் சிவபெருமானின் நண்பரும், செல்வங்களின் அதிபதியுமான குபேரன் மற்றும் செல்வங்களின் அதிபதியான திருமகள் ஆகியோர்களை ஒன்றாக இணைத்து வழிபடுகின்றனர்.

இந்த லட்சுமி குபேர பூசை செய்ய தீபாவளி ஏற்ற நாள் என நம்பப்படுகிறது. எனினும் வாரத்தில் வெள்ளிக்கிழமையில் அமர்த்தயோகம் கூடிய நேரத்தில் விரதம் இருந்து லட்சுமி குபேர பூசை செய்கின்றனர். [1] மஞ்சள் பிள்ளையார் பிடித்தல், அதனை இலையில் வைத்து வழிபடல். பூசைக்கு லட்சுமி குபேரர் படமும், குபேர எந்திரமும் வைக்கப்படுகிறது. இவைகள் வடக்கு திசையில் வைக்கப்பட்டு முதலில் விநாயகர் துதியும், லட்சுமி, குபேர மந்திரங்களும் ஓதப்படுகின்றன.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.dailythanthi.com/others/devotional/2015/05/04165904/lakshmi-kubera-wealth-worship.vpf
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_குபேர_பூஜை&oldid=2112330" இலிருந்து மீள்விக்கப்பட்டது