மணிகா பத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிகா பத்ரா
Manika Batra
Personal information
தேசியம்இந்தியன்
பிறப்பு15 சூன் 1995 (1995-06-15) (அகவை 28)
தில்லி, இந்தியா
உயரம்1.8 m (5 அடி 11 அங்) (2016)
எடை67 kg (148 lb) (2014)

மணிகா பத்ரா (Manika Batra) இந்தியாவின் மேசைப் பந்தாட்ட வீராங்கனை ஆவார். 1995 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 இல் ஒரு குடும்பத்தின் மூன்றாவது குழந்தையாக [1] பிறந்த இவர் 2016 சூன் மாத நிலவரத்தின்படி இந்தியாவின் உயர் தரநிலை ஆட்டக்காரராகவும் உலக அளவில் உள்ள மேசைப்பந்தாட்டக்காரர்களில் 115 ஆவது இடத்திலும் இருந்தார்[2]

இளமைப்பருவம்[தொகு]

தென்மேற்கு தில்லியிலுள்ள நாரயணா விகார் [3] பகுதியில் இவருடைய இளமைப்பருவம் கழிந்தது. நான்கு வயது [4] முதல் இவர் மேசைபந்தாட்ட விளையாட்டை விளையாடத் தொடங்கினார். அக்கா அஞ்சால் மற்றும் அண்ணன் சாகில் இருவரும் மேசைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களே ஆவர் [5]. பத்ராவின் தொடக்கக்கால விளையாட்டைக் கண்டு ஆர்வம் கொண்ட அக்கா அஞ்சால் தொடர்ந்து இவருக்கு உறுதுணையாக இருந்தார் [6]. எட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான மாநிலப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, பத்ரா பயிற்சியாளர் சந்தீப் குப்தாவிடம் பயிற்சி பெறுவது என முடிவெடுத்தார். அவரது ஆலோசனையின் படி ஆன்சு ராச் மாதிரிப் பள்ளியில் [5] சேர்ந்து தனது பள்ளிப் பருவத்தை நிறைவு செய்தார்.

தன்னுடைய பதின்பருவ காலத்தில் கிடைத்த பல்வேறு ஆடையலங்கார மாதிரி வாய்ப்புகளை பத்ரா நிராகரித்தார்.சுவீடனில் உள்ள பீட்டர் கார்லசன் கழகத்தில், உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பையும் 16 வயதாக இருக்கும்போது இவர் நிராகரித்தார். இயேசு மற்றும் மரியா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பத்ரா மேசைப்பந்தாட்டத்தில் முழுக்கவனம் செலுத்துவதற்காக ஓராண்டுப் படிப்புடன் வெளியேறினார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

2011 ஆம் ஆண்டில் சிலியில் [4] நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014 இல் கிளாசுகோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பத்ரா காலிறுதிப் போட்டிவரையில் [5] முன்னேறினார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் காலிறுதி வரையில் முன்னேறினார். 2015 பொதுநலவாய மேசைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் [6] மூன்று பதக்கங்களை வென்றார். பெண்களுக்கான குழுப்போட்டியில் அங்கிதா தாசு மற்றும் மௌமா தாசு ஆகியோருடன் இணைந்து வெள்ளிப் பதக்கமும், பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அங்கிதா தாசுடன் இணைந்து மற்றொரு வெள்ளிப்பதக்கமும், பெண்கள் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார் [7].

2016 தெற்காசியப் போட்டிகளில் பத்ரா மூன்று தங்கப்பதக்கங்களை வென்று புகழ்பெற்றார் [8]. பூசா சகசுராபுத்தேவுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் ஒரு தங்கமும், அந்தோனி அமல்ராசுவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு தங்கமும், பெண்கள் குழுப்போட்டியில் மௌமா தாசு மற்றும் சாமினி குமரேசன் ஆகியோருடன் இனைந்து ஒரு தங்கப்பதக்கமும் வென்றார். ஒற்றையர் போட்டியில் மௌமா தாசிடம் தோற்றதால் நான்காவது தங்கப்பதக்கத்தை இழந்தார் [9]. ஏப்ரல் 2016 இல் நடைபெற்ற தெற்காசியக் குழுவினர் தகுதிப் போட்டியை வென்றதன் மூலம் 2016 கோடைகால ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடத் தகுதி பெற்றார் [10]. போலந்து நாட்டைச் சேர்ந்த கட்டார்சைனா-கிரைபவ்சுகாவிடம் எதிர்பாராவிதமாக முதல் சுற்றிலேயே தோற்று தனிநபர் போட்டியிலிருந்து வெளியேறினார் [11].

மேற்கோள்கள்[தொகு]

  1. Judge, Shahid (3 July 2016). "India’s table tennis hope for Rio 2016 Olympics – Manika Batra". The Indian Express. http://indianexpress.com/article/sports/sport-others/rio-2016-olymics-table-tennis-manika-batra-2890311/. பார்த்த நாள்: 6 July 2016. 
  2. "BATRA Manika (IND) - WR List 6/2016". ITTF. Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Paddler Manika Batra completes hat-trick of gold medals at South Asian Games". News18. 10 February 2016. http://www.news18.com/news/other-sports/paddler-manika-batra-completes-hat-trick-of-gold-medals-at-south-asian-games-1201398.html. பார்த்த நாள்: 4 July 2016. 
  4. 4.0 4.1 "Manika Batra: the new hope of the nation". The Hindu. 21 August 2011. http://www.thehindu.com/todays-paper/tp-sports/manika-batra-the-new-hope-of-the-nation/article2378176.ece. பார்த்த நாள்: 28 June 2016. 
  5. 5.0 5.1 5.2 Sen, Debayan (27 July 2016). "Manika Batra looks to Rio and beyond". ESPN.in. http://www.espn.in/olympics/story/_/id/17145775/manika-batra-looks-rio-beyond. பார்த்த நாள்: 2 August 2016. 
  6. 6.0 6.1 Ghoshal, Shuvro (11 February 2016). "Interview with Manika Batra: “I don’t want to go to Rio Olympics and return without a medal”". Yahoo!. https://in.news.yahoo.com/interview-manika-batra-don-t-140150037.html. பார்த்த நாள்: 4 July 2016. 
  7. Keerthivasan, K. (21 December 2015). "Singapore sweeps singles titles". The Hindu. http://www.thehindu.com/sport/other-sports/avadh20th-commonwealth-table-tennis-championships-singapore-sweeps-singles-titles/article8014783.ece. பார்த்த நாள்: 6 July 2016. 
  8. "Rio Zone – Manika Batra: Nation’s new hope". Pune Mirror. 1 June 2016. http://www.punemirror.in/sports/others/Rio-Zone-Manika-Batra-Nations-new-hope/articleshow/52542678.cms. பார்த்த நாள்: 28 June 2016. 
  9. "South Asian Games: India clean sweeps 12 medals in Table Tennis". Ten Sports. 10 February 2016. http://www.tensports.com/news/south-asian-games-india-clean-sweeps-12-medals-table-tennis. பார்த்த நாள்: 6 July 2016. 
  10. "Table Tennis: Soumyajit Ghosh, Manika Batra book Rio Olympics berths with victories in Asian Qualifiers". DNA India. 14 April 2016. http://www.dnaindia.com/sport/report-table-tennis-soumyajit-ghosh-manika-batra-book-rio-olympics-berths-with-victories-in-asian-qualifiers-2202068. பார்த்த நாள்: 28 June 2016. 
  11. "Rio Olympics 2016: Mouma Das, Manika Batra lose as Indian women's challenge in table tennis ends". First Post. 6 August 2016. http://www.firstpost.com/sports/rio-olympics-2016-mouma-das-manika-batra-lose-as-indian-womens-challenge-in-table-tennis-ends-2939704.html. பார்த்த நாள்: 8 August 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிகா_பத்ரா&oldid=3566311" இலிருந்து மீள்விக்கப்பட்டது