ச. பவனாந்தம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ச. பவனாந்தம் பிள்ளை என்பவர் தமிழறிஞராவார். [1] இவர் ஆங்கிலமும் தமிழும் கற்ற அறிஞர். காவலர் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றியவர். பல தமிழ் நூல்களை அச்சிட்டவர். இவர் பெயரால் வெளிவந்திருக்கும் நன்னூல் காண்டிகை உரை இராமநுசகவிராயர், சங்கர நமச்சிவாயர் முதலியோர் உரைகளை தழுவி எழுதப்பட்டதாகும்.இக்காண்டிகையின் இறுதியில், நன்னூல் சூத்திரங்களோடு ஒத்த தொல்காப்பியச் சூத்திரங்கள் காட்டப்பட்டுள்ளன. இவை ஒப்பு நோக்கில் படிப்பார்க்குப் பெரிதும் பயன்படும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=6&auth_pub_id=17&pno=53
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._பவனாந்தம்_பிள்ளை&oldid=2107150" இலிருந்து மீள்விக்கப்பட்டது