தனஞ்சய டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனஞ்சய டி சில்வா
Dhananjaya de Silva
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தனஞ்சய மதுரங்க டி சில்வா
பிறப்பு6 செப்டம்பர் 1991 (1991-09-06) (அகவை 32)
கொழும்பு, இலங்கை
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கைப் புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்ட பல்துறையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 135)26 சூலை 2016 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு4 ஆகத்து 2016 எ. ஆத்திரேலியா
ஒரே ஒநாப (தொப்பி 169)16 சூன் 2016 எ. அயர்லாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 53)30 சூலை 2015 எ. பாக்கித்தான்
கடைசி இ20ப1 ஆகத்து 2015 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
பதுரெலிய கழகம்
கந்துரட்ட மரூன்சு
ராகமை துடுப்பாட்டக் கழகம்
இலங்கை -19கீழ்
2016-இன்றுதமிழ் யூனியன்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப இ20ப ப.அ
ஆட்டங்கள் 2 1 2 21
ஓட்டங்கள் 131 3 45 509
மட்டையாட்ட சராசரி 32.75 - 22.50 25.45
100கள்/50கள் 1/- -/- -/- 1/1
அதியுயர் ஓட்டம் 116* 3* 31 132
வீசிய பந்துகள் 90 6 - 379
வீழ்த்தல்கள் 1 - - 10
பந்துவீச்சு சராசரி 21.00 - - 26.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 0
சிறந்த பந்துவீச்சு 1/12 - - 2/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- -/- -/– 7/-
மூலம்: ESPNcricinfo, ஆகத்து 6 2016

தனஞ்சய மதுரங்க டி சில்வா (Dhananjaya Maduranga de Silva,சிங்களம்: ධනංජය ද සිල්වා பிறப்பு: 6 செப்டம்பர் 1991) இலங்கையின் தொழில்முறைத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியில் பன்னாட்டுப் போட்டிகளிலும், உள்ளூரில் தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்திலும் விளையாடி வருகிறார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளாயாடி வருகிறார்.[2] 2016- 2017 ஆம் ஆண்டின் இலங்கைத் துடுப்பாட்ட அவை விருது வழங்கும் விழாவில் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரராக இவர் அறிவிக்கப்பட்டார்.[3]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

மார்ச், 2018 இல் நடைபெற்ற 2017-2018 ஆம் ஆண்டிற்கான சூப்பர் ஃபோர் மாகாணத் துடுப்பாட்ட தொடரில் கொழும்பு அணியின் துனைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4][5] மேலும் 2017-2018 ஆம் ஆண்டிற்கான சூப்பர் ஃபோர் மாகாணத் துடுப்பாட்ட தொடரில் விளையாடும் அணியில் இடம்பெற்றார்.[6]

சர்வதேச போட்டிகள்[தொகு]

தனஞ்சய டி சில்வா இலங்கையின் பன்னாட்டு இருபது20 (ப20இ) அணியில் பாக்கித்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் 2015 சூலை மாதத்தில் கலந்து கொண்டு,[7] தனது முதலாவது ப20இ போட்டியை 2015 சூலை 30 இல் விளையாடினார். தனது முதலாவது போட்டியில் 31 ஓட்டங்களை எடுத்தார்.[8] இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

2016 சூன் 16 இல் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் (ஒநாப) போட்டியில்169 ஆவது வீரராக அறிமுகமானார்.[9]

2016 சூலையில் இலங்கையின் தேர்வு அணியில் ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] 2016 சூலை 26 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார்.[11] இந்தப் போட்டியின் முதல்பந்தில் ஆறு ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் முதல் பந்தில் ஆறு ஓட்டங்கள் அடித்த முதல் இலங்கை வீரர் மற்றும் 6 ஆவது சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[12][13][14] பந்துவீச்சில் பீட்டர் நெவிலை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.

இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[15] இந்தப்போட்டியில் 26 ஓட்டங்களுக்கு 5 இலக்குகள் எனும் இக்கட்டான நிலையில் தினேஸ் சந்திமலுடன் இணைந்து சிறப்பாக விளையாடினர். இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் 325 ஓட்டங்கள் எடுத்து முதல் இடம் பிடித்தார்.இதில் ஒரு நூறு மற்றும் ஒரு அரைநூறும் அடங்கும். இவரின் சராசரி 65.00 ஆகும்.[16] இந்தத் தொடரை இலங்கை அணி வென்றது. ஆத்திரேலிய அணிக்கு எதிராக முழுமையாக வெல்வது இதுவே முதல்முறையாகும்.[17]

இந்தியச் சுற்றுப் பயணம்[தொகு]

இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.[18] பின் 2017 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.இந்தப் போட்டியின் தனது மூன்றாவது நூறினைப் பதிவு செய்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது .இந்தத் தொடரை இந்திய அணி 1-0 எனும் கணக்கில் வென்றது.[19] இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 119* ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய மண்னில் அயல்நாட்டு வீரர் ஒருவரின் நான்காவது அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனை படைத்தார்.[20]

வங்காளதேசத் தொடர்[தொகு]

2018 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது நான்காவது நூறினை அடித்தார். இது தொடர்ச்சியான இரண்டாவது நூறாகும். புது தில்லியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்திருந்தார். இவரும் குசல் மெண்டிசும் இணைந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 187 ஓட்டங்கள் எடுத்தனர்.[21][22]

பன்னாட்டு சதங்கள்[தொகு]

தேர்வு சதங்கள்[தொகு]

தனஞ்சய டி சில்வாவின் தேர்வு சதங்கள்
இல. ஓட்டங்கள் ஆட்டம் எதிரணி நகர்/நாடு அரங்கு நாள் முடிவு
[1] 129 3  ஆத்திரேலியா இலங்கை கொழும்பு, இலங்கை சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் 13 ஆகத்து 2016 வெற்றி

மேற்கோஊள்கள்[தொகு]

  1. "Dhananjaya de Silva". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2015.
  2. "Dhananjaya de Silva". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 July 2015.
  3. "Gunaratne wins big at SLC's annual awards". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  4. "Cricket: Mixed opinions on Provincial tournament". Sunday Times (Sri Lanka). 26 March 2018. http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament. பார்த்த நாள்: 27 March 2018. 
  5. "All you need to know about the SL Super Provincial Tournament". Daily Sports. 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/. பார்த்த நாள்: 27 March 2018. 
  6. "SLC Super Provincial 50 over tournament squads and fixtures". The Papare. http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/. பார்த்த நாள்: 27 April 2018. 
  7. "Five uncapped players in SL squad for Pakistan T20s". ESPNcricinfo. ESPN Sports Media. 23 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2015.
  8. "Pakistan tour of Sri Lanka, 1st T20I: Sri Lanka v Pakistan at Colombo (RPS), Jul 30, 2015". ESPNcricinfo. ESPN Sports Media. 30 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2015.
  9. "Sri Lanka tour of England and Ireland, 1st ODI: Ireland v Sri Lanka at Dublin (Malahide), Jun 16, 2016". ESPNcricinfo. ESPN Sports Media. 16 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
  10. "Siriwardana left out of Sri Lanka squad for first Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2016.
  11. "Australia tour of Sri Lanka, 1st Test: Sri Lanka v Australia at Pallekele, Jul 26-30, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2016.
  12. "Sri Lanka's shortest innings after electing to bat". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.
  13. "Debutant de Silva joins exclusive club". cricket.com.au. http://www.cricket.com.au/news/dhananjaya-de-silva-sri-lanka-six-first-scoring-shot-debut-first-test-australia-kandy-highlights/2016-07-27. 
  14. "Six and in: Debutant's rare feat against Aussies". The Courier Mail. 26 July 2016. http://www.couriermail.com.au/sport/cricket/sri-lanka-v-australia-debutant-dhananjaya-de-silva-joins-exclusive-club/news-story/00ea3342ca7ccccb0618b37962e25839. 
  15. "De Silva and Chandimal lead Sri Lanka fightback". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016.
  16. "Records / Warne-Muralitharan Trophy, 2016 / Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
  17. "Herath bowls Sri Lanka to historic whitewash". ESPNcrincinfo. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
  18. "Kusal Perera back in Sri Lanka ODI squad". ESPN Cricinfo. 5 December 2017. பார்க்கப்பட்ட நாள் 5 December 2017.
  19. "Dhananjaya, Roshen deny India 2–0". ESPN Cricinfo. 6 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2017.
  20. "India's record streak of nine consecutive series wins". ESPN Cricinfo. 6 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2017.
  21. "Dhananjaya, Mendis lead strong Sri Lanka reply". ESPN Cricinfo. 1 February 2018. பார்க்கப்பட்ட நாள் 1 February 2018.
  22. "Mendis and Dhananjaya battle adversity to keep Sri Lanka afloat". ESPN Cricinfo. 1 February 2018. பார்க்கப்பட்ட நாள் 1 February 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனஞ்சய_டி_சில்வா&oldid=3348620" இலிருந்து மீள்விக்கப்பட்டது