பவர் ரேஞ்சர்ஸ் மைட்டி மார்ஃபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவர் ரேஞ்சர்ஸ் மைட்டி மார்ஃபின் (Power Rangers Mighty Morphin) முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடர் ஆகும்.[1] இத்தொடரினை சாபன் நிறுவனம் தயாரித்தது. பவர் ரேஞ்சர்ஸ் அறிமுக பாடலான கோ கோ பவர் ரேஞ்சர்ஸ்] இந்த தொடரின் பாடலாகும். இராட்சத இயந்திரங்களுக்கு பவர் ரேஞ்சர்ஸ் தொடரில் வழங்கப்படும் ஜோர்ட்ஸ் (zords) என்னும் பெயர் இத்தொடரின் ஜோர்டான் என்ற காதபாத்திரத்தின் பெயரில் இருந்தே வந்தது.

கதை சுருக்கம்[தொகு]

பகுதி - 1[தொகு]

விண்வெளி வீரர்கள் ஒரு கலனை ஆராயும் போது ரீட்டா என்னும் தீய சக்தியை விடுவித்து விடுகிறார்கள். இதை அறியும் ஜோர்டான் பொருத்தமான 5 இளம் நபர்களை தேர்ந்தெடுக்க தன் உதவி இயந்திரத்திற்கு கட்டளை இடுகிறார். தேர்ந்தெடுக்கபட்ட ஐவர் சக்தி நாணயங்கள் துணையுடன் ரேஞ்சர்களாக மாறி ரீட்டாவின் படைகளுடன் போராடுகிறார்கள்.

பகுதி - 2[தொகு]

ரீட்டாவை விட உயர் நிலையில் இருக்கும் லார்ட் ஜேட் பூமியை கைபற்ற வருகிறார். அவருடன் ரேஞ்சர்ஸ் போராடுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]