தைக்கி (கருதுகோள்நிலைக் கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைக்கி கணினி உருவாக்கம்

தைக்கி(ஆங்கிலம்:Tyche) என்பது சூரியக்குடும்பத்தில் ஓர்ட் முகிலில் இருக்கலாம் என கருதப்படும் ஒரு அனுமான வாயுக்கோள் ஆகும்.[1] இது முதன்முதலில் 1999ஆம் ஆண்டு ஜான் மேட்டீஸ், பேட்ரிக் விட்மேன் மற்றும் டேனியல் விட்மையரால் பரிந்துரைக்கப்பட்டது. தொலைதூர வால்நட்சத்திரங்களின் போக்கை வைத்து அவை இந்த கோளின் தாக்கத்தால் ஏற்படுகின்றன என வாதிட்டனர். 2014ஆம் ஆண்டு நாசா WISE ஆய்வின் மூலம் இக்கோளும் மற்றும் கோள் எக்ஸ் எண்ணப்படும் கோளும் சூரிய மண்டலத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்தது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Largest planet in the solar system could be about to be discovered - and it's up to four times the size of Jupiter". dailymail.co.uk. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
  2. "'Planet X,' The Mysterious Planet Beyond Pluto, Is Nowhere To Be Found In NASA's WISE Survey". International Buisness Times. Charles Poladian. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.