புருச தத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புருச தத்துவம் (Purusha) (சமசுகிருதம் puruṣa, पुरुष) சாங்கிய தத்துவம் கூறும் புருஷன், பிரபஞ்ச படைப்புக்குக் காரணமானவன் என்று கூறப்படுகிறது. நான் என்ற ஆத்மா என்றும், அறிவு வடிவினன் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.[1][2]

வேதம்[தொகு]

ரிக் வேத புருஷ சூக்தத்தில் புருஷனின் மனதால் தோன்றிய, இரண்யகர்பன் எனும் பிரம்மன், சீவராசிகளுடன் கூடிய இப்பிரபஞ்சத்தை படைத்தார் என குறித்துள்ளது.

வேதாந்தம்[தொகு]

வேதாந்தம் எனும் உபநிடதங்களில் பிரபஞ்சத்தை படைத்த புருஷன் என்ற தத்துவம் விளக்கப்படவில்லை. ஆனால் பிரபஞ்ச படைப்பிற்கு ஈஸ்வரன் காரணமானவன் என விளக்கப்பட்டுள்ளது.[3] மாயையுடன் கூடிய பிரம்மமாகிய ஈஸ்வரனே அனைத்து பிரபஞ்சத்திற்கும், உயிரினங்களுக்கும் காரணம் எனக் கூறுகிறது.

சாங்கியம்[தொகு]

கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாத சாங்கியம், பிரகிருதி என்ற (இயற்கை/சடப்பொருள்) மற்றும் புருஷன் (அறிவுள்ள பொருள்) ஆகியவைக் குறித்து பேசுகிறது. அறிவும் உணர்வு வடிவான புருஷன் எதுவும் செய்வதில்லை என்றும்; சடத்தன்மை கொண்ட பிரகிருதியே (இயற்கையே) அனைத்தையும் படைத்துக் கொள்கிறது என சாங்கியம் கூறி புருஷனின் மேன்மையை விளக்கவில்லை.[4]

புருஷன் அறிவுள்ள பொருள் என்றும், பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. பிரபஞ்சமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புருச_தத்துவம்&oldid=3922389" இலிருந்து மீள்விக்கப்பட்டது