பேச்சு:தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்புகள் அமைப்பு[தொகு]

வணக்கம். விக்கி மாரத்தான் 2016 மேற்கொள்ளப்பட்ட இன்று இக்கட்டுரையில் அகரவரிசையில் இறைவன்வாரியான பட்டியல், தலவாரியான பட்டியல் என்று இரு பட்டியல்கள் பிரிக்கப்பட்டு, உரிய இணைப்புகள் தரப்பட்டன. தொடர்ந்து பதிவு செம்மைப்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:33, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

வடகரைத் தலங்கள்[தொகு]

காவேரியாற்றின் வடகரையில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களைக் குறிக்க பிறிதொரு பதிவு காவேரி வடகரை சிவத்தலங்கள் என்ற தலைப்பில் காணப்படுகிறது. இத்தலைப்பு தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல் என்றவாறு உள்ளது. ஒரே பொருண்மையில் பதிவுகள் அமையும்போது சொற்றொடர் தலைப்பு ஒரே நிலையில் (style) அமைந்தால், வாசகர்களுக்கு படிக்கவும், தேடவும் உதவியாக இருக்கும். தவிரவும் இத்தலைப்பு சற்றே நீளமாக உள்ளதைப் போலுள்ளது. ஆகவே, அன்புகூர்ந்து இக்கட்டுரையின் தலைப்பினை வடகரைத்தலங்களின் தலைப்பில் காணப்படுவதபோன்று காவேரி தென்கரை சிவத்தலங்கள் என்று மாற்றி உதவ வேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:48, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

அவ்வாறு இல்லையாயின் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களின் பட்டியல் என்று அமைப்பது குறித்துக் கருதிப் பார்க்கவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:46, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

வேறுபாடு[தொகு]

வணக்கம், இன்று இறைவன் பெயர் தொடர்பான பட்டியல் தனியாகவும், தலங்கள் பெயர் தொடர்பான பட்டியலும் செம்மைப்படுததப்படும்போது வித்தியாசம் (128/127)ஒன்று வந்துள்ளது. விரைவில் அது சரிசெய்யப்படும். தொடர்ந்து பதிவேற்றம் செய்யும்போது இவ்விடுபாடு ஏற்பட்டது. பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன். நன்றி. பதஞ்சலி மனோகர், விளமல் விடுபட்டிருந்தது. தற்போது சரிசெய்துவிட்டேன். இரு பட்டியலும் தற்போது (128) பொருந்திவருகிறது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:58, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள் நூலில் (வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, 2009) திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில் என்ற தலத்திற்கான தேவாரப் பாடல்கள் கிபி 1917ல் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அவ்வகையில் தென் கரையில் உள்ள தலங்கள் 128 என்று கொள்ளப்படவேண்டும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:54, 3 மார்ச் 2019 (UTC)

அந்தந்த கோயிலுடன் இணைப்பு சேர்த்தல்[தொகு]

காவிரி தென்கரைத் தலங்களில் எனப்படுகின்ற இப்பட்டியல் அந்தந்த கோயிலைப் பற்றிய பதிவில், வாசிக்க எளிமையாக இருப்பதற்காக, இணைக்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:06, 3 மார்ச் 2019 (UTC)