ஹோலிகா தகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோலிகா தகனம்
ஹோலிகா சொக்கப்பனை-உதயப்பூர், இராசத்தான்
வகைஇந்துப் பண்டிகை
கொண்டாட்டங்கள்ஹோலிகா தகனத்தன்று: தீ எரித்தல்
ஹோலியன்று: பிறர்மீது வண்ணப்பொடி பூசுதல்; பண்டிகைச் சிறப்பு உணவுகள்
தொடக்கம்பங்குனி மாத முழுநிலவு நாள்
நாள்பிப்ரவரி-மார்ச்
தொடர்புடையனஹோலி
ஹோலி நெருப்பு, தில்லி-2012

ஹோலிகா தகனம் அல்லது ஹோலிகா எரிப்பு (Holika Dahan) என்பது ஹோலிப் பண்டிகைக்கு முதல் நாள் மாலை கொண்டாடப்படும் இந்துப் பண்டிகையாகும். இந்துசமயப் புராணங்களின்படி, பிரகலாதனைக் கொல்வதற்காக இரணியகசிபுவின் தூண்டுதலால் ஹோலிகா மேற்கொண்ட முயற்சியில் அவளே எரிந்து மாண்டுபோனாள். இந்நிகழ்ச்சியின் அடையாளமாக ஹோலிகா தகனம் கொண்டாடப்படுகிறது.

முக்கியத்துவம்[தொகு]

நேபாளத்தின் காத்மண்டுவில் ஹோலிகா தகனத்திற்கு ஏற்பாடுகள் செய்யும் பெண்கள்

பிரகலாதன் கதையோடு இணைந்த பல நிகழ்வுகள் இருந்தாலும் ஹோலிகாவை எரிப்பதுதான் ஹோலியுடன் இணைக்கப்படுகிறது. ஹோலிக்கு முதல் நாள் இரவில் கொண்டாடப்படும் தீமூட்டல் மூலம் ஹோலிகா எரிக்கப்படுவதாகக் கொள்ளப்படுகிறது. ஹோலிகா தகனத்திற்குப் பின்னணியில் உள்ள பிரகலாதன் கதை, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையால் ஒருவருக்கு நேரும் கேடுகளை நிச்சயமாக வெல்ல முடியும் என்பதை வலியுறுத்தும்வண்ணம் அமைந்துள்ளது.

வட இந்தியா, நேபாளம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் ஹோலி நாளுக்கு முந்தைய இரவில் சிதைமூட்டி எரிக்கப்படுகிறது.[1] இளைஞர்கள் பலவிதமான பொருட்களை விளையாட்டாகத் திருடிவந்து ஹோலிகா சிதையிலிடுவர். இந்தியாவின் சில பகுதிகளில் இந்நாள் ”ஹோலிகா” என்றும் அழைக்கப்படுகிறது.

கொண்டாடுதல்[தொகு]

ஹோலிப் பண்டிகை நெருப்பு-முந்திரா, 2015
தயாரிப்பு

பண்டிகைக்குப் பல நாட்கள் முன்பிருந்தே பூங்காக்கள், சமுதாயக்கூடங்கள், கோவில்களுக்கு அண்மைப்பகுதிகள் மற்றும் திறந்தவெளிகளில் ஹோலிகா தகனத்திற்குச் சிதை தயாரிக்கத் தேவையான எரிபொருட்களைச் சேகரிக்கத் தொடங்குகின்றனர். சிதையின் உச்சியில் பிரகலாதனைத் தந்திரமாக எரித்துவிடத் திட்டமிட்ட ஹோலிகாவைக் குறிக்கும் உருவபொம்மை உச்சியில் வைக்கப்படுகிறது. வீட்டினுள் மக்கள் வண்ணப்பொடிகள், குடிபானங்கள் மற்றும் பண்டிகைக்கால உணவுவகைகள் வீடுகளில் தயாரித்தோ அல்லது சேகரித்தோ வைக்கப்படுகின்றன.

ஹோலிகா தகனம்

ஹோலிக்கு முதல் நாள் மாலையில் சூரிய மறைவின்போது அல்லது மறைவுக்குப்பின் தயார்செய்து வைக்கப்பட்டிருக்கும் சிதையில் தீ மூட்டப்படுகிறது. தீயவற்றை நல்லவை வெல்லும் என்ற கருத்தின் குறியீடாக இச்சடங்கு அமைகிறது. மக்கள் தீயைச் சுற்றி பாடியும் ஆடியும் மகிழ்வர். ஹோலிகா தகனத்திற்கு அடுத்த நாள் வண்ணத் திருவிழாவான ஹோலி கொண்டாடி மகிழப்படுகிறது.

ஹோலிகா எரிந்துபோனதற்கான காரணம்[தொகு]

ஹோலி கொண்டாடப்படுவதற்கான புராணக்காரணமாக ஹோலிகா தகனம் உள்ளது. ஹோலிகா எரிந்து போனதற்கு பலவிதமான காரணங்கள் நிலவுகின்றன. அவற்றுள் சில:

  • திருமால் உள்ளே வந்ததால் ஹோலிகாவை எரிந்து போனாள்.
  • அடுத்தவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் செய்யப் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் தான் பிரம்மா ஹோலிகாவுக்கு சக்தியளித்திருந்தார். ஆனால் அவள் பிரகலாதனைக் கொல்வதற்குச் சதிசெய்ததால் அவளது சக்தி பயனில்லாமல் போனது.
  • ஹோலிகா இயல்பாகவே நல்லவள். அவள் அணிந்திருந்த உடைதான் அவளுக்கு சக்தியைத் தரவல்லது. தான் செய்யப்போகும் காரியம் தவறானது என்பதை உணர்ந்த ஹோலிகா அந்த ஆடையைப் பிரகலாதனுக்குத் தந்துவிட்டுத் தான் தீயில் எரிந்து மாண்டாள்.[2]
  • தீயிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு போர்வையால் தன்னை மூடிக்கொண்டு ஹோலிகா பிரகலாதனை மடியிலமர்த்தியவாறு தீக்குள் இறங்கினா. திருமால் வேகமான காற்றை வீசச் செய்து அப்போர்வையை ஹோலிகாவிடமிருந்து விலகி பிரகலாதனை மூடிக்கொள்ளச் செய்தார். இதனால் பிரகலாதன் காப்பாற்றப்பட்டான், ஹோலிகா தீயில் மாண்டாள்[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோலிகா_தகனம்&oldid=3792019" இலிருந்து மீள்விக்கப்பட்டது