பஞ்சாபி நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Seal of Punjab India
Coat of Arms Punjab Pakistan
இந்திய பஞ்சாபின் முத்திரை (இடது) மற்றும் பாக்கித்தானிய பஞ்சாபின் சின்னம் (வலது)

பஞ்சாபி நாட்காட்டி என்பது பிக்ராமி நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்காட்டி ஆகும். இது வைசாக் மாதத்தின் முதல் நாளை பஞ்சாபி ஆண்டுத்தொடக்கமாகக் கொண்டுள்ளது. இந்நாள் வைசாக்கி எனும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

பஞ்சாபி நாட்காட்டியின் மாதங்கள்[தொகு]

கீழே உள்ள அட்டவணையில் சூரிய மாதமான வைசாக் மாதத்தில் இருந்து நாட்காட்டி தொடங்குகிறது. மாதங்களின் பெயர்கள் வரிசையாக உள்ளன.

வ.எண். சூரிய மாதத்தின் பெயர் கால அளவு
1. வைசாக் (பேசாக்) ஏப்ரல் நடுவிலிருந்து மே நடு வரை
2. யேத் மே நடுவிலிருந்து சூன் நடு வரை
3. அர் சூன் நடுவிலிருந்து சூலை நடு வரை
4. சாவன் சூலை நடுவிலிருந்து ஆகத்து நடு வரை
5. பாதோன் (பத்ரே) ஆகத்து நடுவிலிருந்து செப்டம்பர் நடு வரை
6. அசூய் (அசுன்) செப்டம்பர் நடுவிலிருந்து அக்டோபர் நடு வரை
7. கட்டேக் (கட்டூன்) அக்டோபர் நடுவிலிருந்து நவம்பர் நடு வரை
8. மகர் நவம்பர் நடுவிலிருந்து திசம்பர் நடு வரை
9. போ திசம்பர் நடுவிலிருந்து சனவரி நடு வரை
10. மாக் சனவரி நடுவிலிருந்து பெப்ரவரி நடு வரை
11. பகன் பெப்ரவரி நடுவிலிருந்து மார்ச் நடு வரை
12. சேடார் மார்ச் நடுவிலிருந்து ஏப்ரல் நடு வரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_நாட்காட்டி&oldid=2092593" இலிருந்து மீள்விக்கப்பட்டது