சீனர்கள், மகாபாரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சீனர்கள் (Chinas or Chīnaḥ (சமஸ்கிருதம் चीन:), மகாபாரத காவியம் மற்றும் புராணங்கள் கூறும், பண்டைய பரத கண்டத்தின் வடகிழக்கில் வாழ்ந்த மஞ்சள் நிற மக்களாவர். இம்மக்கள் தற்கால சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

குருச்சேத்திரப் போரில் பகதத்தனின் பிராக்ஜோதிச படையில், கிராதர்களுடன், சீன வீரர்களும் இருந்தனர்.

மகாபாரதம், பீஷ்ம பருவம், அத்தியாயம் 65 & 66-இல் சீனர்களுடன், மிலேச்சர்கள், யவனர்கள், சகர்கள், சிதியர்கள், காம்போஜர்கள், குந்தலர்கள், ஹூணர்கள், பாரசீகர்கள், தருணர்கள், இரமணர்கள், தசமாலிகர்கள் போன்ற வெளிநாட்டு இன மக்களைக் குறித்துள்ளது. [1]

மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் சீனர்களை இமயமலைத்தொடர்களில் உள்ள உத்தரபாத நாடுகளின் யவனர்கள், கிராதர்கள், காந்தாரர்கள், ஷபரர்கள், சகர்கள், துஷாரர்கள், பகவலவர்கள், மத்திரர்கள், காம்போஜர்களுடன் ஒப்பிட்டு பேசுகிறது. இம்மக்கள் வேத கால பண்பாட்டை பின்பற்றாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.[2]

மகாபாரத வன பருவத்தில், கிராதர்களின் இமயமலை வழியாக சீனர்களின் நிலப்பரப்பை அடையலாம் எனக்குறித்துள்ளது. பரத கண்டத்திற்கு வடக்கே அமைந்த நாடுகளின் ஒன்றாக சீனர்களின் நாட்டை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. MBH 6/9/65-66
  2. MBH 12/65/13-15
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனர்கள்,_மகாபாரதம்&oldid=2282379" இலிருந்து மீள்விக்கப்பட்டது