பயனர் பேச்சு:Neechalkaran/எண்ணிக்கை1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Rsmn, Kanags, Booradleyp1, Jagadeeswarann99, பா.ஜம்புலிங்கம், உலோ.செந்தமிழ்க்கோதை, and மதனாஹரன்: @Selvasivagurunathan m, Semmal50, and Parvathisri:: இச்சொற் பட்டியல் ஏறத்தாழ 40,000 கட்டுரைகளில் தானியக்கமாக பயன்பட உள்ளது. எனவே, இதன் முக்கியத்துவம் கருதி, இப்படியலில் உள்ள பிழைகளைக் களைந்தும் மாற்றுச் சொற்களைப் பரிந்துரைத்தும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அட்டவணையில் மூன்றாவது கட்டத்தில் மாற்றுச் சொற்கள், பிழை திருத்திய வடிவத்தை இடலாம். ஐயம் உள்ள இடங்களில் கேள்விக்குறி இட்டால் மற்றவர்கள் உரையாடி முடிவுக்கு வருவார்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:37, 14 சூலை 2016 (UTC)[பதிலளி]

சிலவற்றிக்கு சொற்களை இட்டுள்ளேன். அகரவரிசைப்படுத்தப்பட்ட பட்டியலை பயனர்:Jagadeeswarann99/மணல்தொட்டி என்பதில் காணுங்கள். ஒரே பெயரைக்குறிக்க நிறையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அதன் மூலம் அறியலாம். சில சொற்கள் இடைவேளியின்றி இணைக்கப்பட்டுள்ளன. அவற்றினை பிரித்தெடுத்தால் இப்பட்டியல் பாதி நிறைவுரும். என்னால் இயன்றதைச் செய்துவிட்டு வேலைநடந்து கொண்டிருக்கிறது வார்ப்புருவை நீக்கம் செய்துவிடுகிறேன். நன்றி. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:12, 14 சூலை 2016 (UTC)[பதிலளி]
அருள்மிகு, அருள்பாலிக்கிறார், திருக்கோயில், ஸ்ரீ போன்ற சொற்களை விக்கியில் கையாளுவதில்லை. இவற்றுக்கு என்ன செய்யலாம்?--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:48, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]
அருள்மிகு, திருக்கோயில் என்பவற்றை கோயில்கள் தொடர்பாக பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. தலைப்புக்களில் தவிர்க்கலாம். அருள்பாலிக்கிறார் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். சிலை நிறுவப்பட்டுள்ளது, உலா வரிதல் போன்ற மாற்றுச் சொற்றொடர்களை பாவிக்கலாம். திருக்கோயில் என்பது தேவத்தானம் எனப்பட்ட நிர்வாக அமைப்பைக் குறிப்பிடுவதாக கருதுகின்றேன். ஸ்ரீ மாறாக சிறீ ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளது. --மணியன் (பேச்சு) 17:30, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]
இந்தப் பட்டியலை முதல்நிலையில் வடிகட்டி சிக்கலானச் சொற்களை மட்டும் இட்டால் கருத்துரைக்கவும் உரையாடவும் ஏதுவாகும். இல்லையெனில் கவனம் சிதறக்கூடும்.
  1. பெரிய பட்டியல் கணினியில் ஏறவே நேரமெடுக்கிறது.
  2. நிரல் இல்லாது மனிதமுயற்சியில் தொகுப்பது மிகவும் அயர்வைத் தருகின்றது.
  3. பெரும்பாலான ஊர் பெயர்கள், தமிழ் சொற்கள், பகுதி விகுதிகளை நீக்கினாலே பட்டியல் சுருங்கக்கூடும். --மணியன் (பேச்சு) 17:30, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]
மாவீரர், மகா, அன்னை, மகாத்மா போன்ற அடைமொழிகள் சிறப்பு கருதி வழங்குவது மரபு. தகவல் பெட்டியில் மட்டும் அருள்மிகு என்ற அடைமொழியுடன் வழங்குவது மரபைச் சிதைக்காமல் இருக்கும். அருள்திரு, அருட்தந்தை, புனித போன்ற மொழிகள் ஏற்கனவே விக்கியிலும் உள்ளன புனித அன்னை மரியா பெருங்கோவில் (பெங்களூரு). கட்டுரையில் தொடருடன் பார்க்காமல் தனித்தனிச் சொல்லாக மாற்றுவது பொருட்பிழை ஏற்படுத்தலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 01:28, 17 சூலை 2016 (UTC)[பதிலளி]
பிராத்தனை என்ற சொல் தவறாகும். இது பிரார்த்தனை என வரவேண்டும். --சிவகோசரன் (பேச்சு) 15:59, 17 சூலை 2016 (UTC)[பதிலளி]
தொகு பக்கத்தைத் திறக்கவும் மாற்றங்களைச் சேமிக்கவும் எனது சிறு கணினியில் மிகவும் சிரமமாக உள்ளது. அதிக நேரமாகிறது. எனவே பங்களிப்பது எனக்கு எளிதாக இல்லை. பகுதிபகுதியாக பிரிக்கப்பட்டால் தொகுப்பது எளிதாக இருக்குமென நினைக்கிறேன். என்னால் முடிந்தவரை சில மாற்றுச் சொற்களை அளித்திருக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:35, 17 சூலை 2016 (UTC)[பதிலளி]
  • மணியன், Booradleyp1 பக்கம் மெதுவாகத் திறக்கும், சேமிக்கும் சிக்கலைத் தீர்க்க சிறு சிறு பட்டியல்களாக மாற்றி உள்ளேன். பார்க்க, பட்டியல்கள்
  • ஒவ்வொரு முறை மாற்றுச் சொற்களைத் தந்து சேமிக்கும் போதும், உறுதியாக ஏற்புடைய சொற்களின் வரிசைகளை நீக்கி விடுங்கள். இதனால் ஒவ்வொரு முறையும் பட்டியல் சிறிதாகிக் கொண்டே வந்து கவனம் குவிக்கவும் பிறகு ஒன்று திரட்டி உரையாடவும் உதவும். எடுத்துக்காட்டுக்கு, இந்த மாற்றத்தைக் காணுங்கள். சில ஊர் பெயர்கள், சொற்கள் ஏற்புடையன போல தோன்றும். ஆனால், சிறு பிழை இருக்கக் கூடும். எனவே, கவனித்து உறுதிப்படுத்தி நீக்க வேண்டுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, கீழ்வேளுர் தவறு. கீழ்வேளூர் சரி. விருத்தாசலம் புழக்கத்தில் உள்ளது. ஆனால், முதன்மைக் கட்டுரை விருத்தாச்சலம் என்றே உள்ளது.
  • மணியன், இந்தப் பணிக்கு எவ்வாறான நிரல் உதவும் என்று விளக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 21:26, 17 சூலை 2016 (UTC)[பதிலளி]
இரவி, விக்கிதானுலாவி போன்ற ஒன்றால் வடிகட்டி தொகுப்பது அல்லது சொற்களை விக்சனரி சொற்களுடன் ஒப்பிடும் நிரல் அமைப்பது, நீச்சல்காரனின் சொற்திருத்திகள் போன்று ஏதாவது தீர்வு இருக்கும் எனக் கருதினேன். முதன்மையாக நான் கூற விழைந்தது மனிதமுயற்சி மிகவும் அயர்ச்சியாக உள்ளது என்பதே. ஆம், இல்லை போன்றவற்றையெல்லாம் வடிகட்ட வேண்டியிருந்தது. உங்கள் தீர்வுக்கு நன்றி.--மணியன் (பேச்சு) 01:18, 18 சூலை 2016 (UTC)[பதிலளி]
  • பட்டியலில் உள்ள சில சொற்களைப் பார்க்கும்போது அவை கல்வெட்டுக்களில் இருந்து எடுக்கப்பட்டவை போல் தோன்றுகின்றன. இச்சொற்கள் எவ்வகையில் கட்டுரைகளில் பயன்பட உள்ளன? கல்வெட்டு வரிகளை மேற்கோள் காட்டுவதுபோல் வருமானால் அவற்றைப் பிழை திருத்தக்கூடாது. ---மயூரநாதன் (பேச்சு) 17:15, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]
  • எவ்வாறான சூழல்களில் பட்டியலில் உள்ள சொற்கள் கட்டுரைகளில் வரக்கூடும் என்று தெரியவில்லை. சில சொற்கள் வெவ்வேறு வடிவங்களில் பலமுறை வருவதாகத் தெரிகின்றன. எடுத்துக்காட்டாக "காமிக", "காமிகா", "காமீக" என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்தும் "காமிகாகமம்" (காமிக ஆகமம்) தொடர்பிலேயே வருகின்றன என எண்ணுகிறேன். மேற்காட்டிய பல்வேறு வடிவங்கள் கட்டுரைகளில் எவ்வாறு இடம்பெறக்கூடும் என்று சொல்ல முடியுமா? ---மயூரநாதன் (பேச்சு) 17:32, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]