பஞ்சாபி இந்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாபி இந்துக்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பஞ்சாபி மக்கள், வட இந்திய மக்கள்

பஞ்சாபி இந்துக்கள் (Punjabi Hindus) இந்தியத் துணைக்கண்டத்தின் பஞ்சாப் பகுதிகளில், வாழும் இந்து சமயத்தைப் பின்பற்றும் பஞ்சாபி மொழியைத் தாய் மொழியாக கொண்ட மக்கள் ஆவார். இந்து பஞ்சாபி மக்கள் தாங்கள் பேசும் பஞ்சாபி மொழிக்கு தேவநாகரி எழுத்து முறை பயன்படுத்துகிறார்கள். சீக்கிய பஞ்சாபியர் குர்முகி எழுத்துகளையும், முஸ்லீம் பஞ்சாபியர் அரபு எழுத்துக்களையும் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் பஞ்சாப், அரியானா, ஜம்மு, சண்டிகர் மற்றும் தில்லி ஆகிய பகுதிகளிலும் மற்றும் அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் துபாய் போன்ற வெளிநாடுகளிலும் வாழ்கின்றனர்.

இசுலாமிய சமயம் இந்தியாவில் பரவுதற்கு முன்னர் வரை, பஞ்சாப் மக்களின் சமயமாக இந்து சமயம் விளங்கியது. முகலாயர் ஆட்சிக்காலத்தில், குரு நானக் போன்ற இந்துக்களில் சிலர் சீக்கிய சமயத்தை தோற்றுவித்தனர். பெருவாரியான பஞ்சாபிய இந்துக்கள் தங்களை சீக்கிய சமயத்தில் இணைத்துக் கொண்டனர். லாலா லஜபதி ராய், ஐ. கே. குஜரால், குல்சாரிலால் நந்தா, கபில் தேவ் மற்றும் ஹர் கோவிந்த் கொரானா ஆகியோர் புகழ் பெற்ற பஞ்சாபிய இந்துக்களில் சிலராவர்.

வேத கால பஞ்சாப்[தொகு]

ஏழு ஆறுகள் கொண்ட வேத கால பஞ்சாப் பகுதிகளை காட்டும் வரைபடம்

இந்திய விடுதலைக்கு முந்தைய பஞ்சாப் பகுதி, தற்போது மேற்கு பஞ்சாப், கிழக்கு பஞ்சாப், அரியானா, இமாசலப் பிரதேசம், சண்டிகர் மற்றும் ஜம்மு என அரசியல் காரணமாக பிரிக்கப்பட்டுள்ளது.

ரிக் வேதத்தில் ஏழு ஆறுகள் பாயும் பகுதியாக பஞ்சாப் குறிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆறுகளின் பெயர்கள்;

  1. சரஸ்வதி
  2. சுதத்திரி (சத்லஜ்
  3. விபாசா (பியாஸ்
  4. அசிகனி, சந்திரபாகா (செனாப்
  5. ஐராவதி (ராவி
  6. விதஸ்தா (ஜீலம்)
  7. சிந்து

பஞ்சாப் பகுதியில் உருவான வேத கால இலக்கியங்கள் பின்வருமாறு;

மக்கள் தொகை வளர்ச்சியில் பஞ்சாபிய இந்து சமயத்தவர்கள் (1881–1941)[தொகு]

பஞ்சாப் பகுதியில் 1881-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 43.8% ஆக இருந்த இந்து சமயத்தினர், சீக்கிய சமய எழுச்சியால், 1941-இல் பஞ்சாபிய இந்து சமய மக்கள் தொகை 29.1% ஆக குறைந்து விட்டது.[1]

1947 இந்தியப் பிரிவினையின் போது பஞ்சாபிய இந்துக்கள்[தொகு]

1947-இல் நடந்த இந்தியப் பிரிவினையின் போது, வங்காள இந்துக்களைப் போன்று, பாகிஸ்தான் பகுதியில் இருந்த ஒரு இலட்சம் பஞ்சாபிய இந்துக்கள், இந்தியாவின் கிழக்கு பஞ்சாப் பகுதிகளில் குடிபெயரும் போது பெருந்துன்பங்கள் அடைந்தனர்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

பஞ்சாபிய இந்துக்களில் பெரும் எண்ணிக்கையினர், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டம், சாகித் பகத் சிங் நகர் மாவட்டம் மற்றும் ஹோசியார்பூர் மாவட்டங்களிலும்; அரியானா, சண்டிகர், இமாசலப் பிரதேசம், தில்லி, ஜம்மு, மும்பை ஆகிய பகுதிகளிலும்; அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கனிசமாக வாழ்கின்றனர்.

புகழ் பெற்ற பஞ்சாபி இந்துக்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
  2. Bengali Cinema: 'An Other Nation' by Sharmistha Gooptu
  3. http://www.theguardian.com/film/2011/feb/10/bollywood-bit-part-nirpal-dhaliwal

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_இந்துக்கள்&oldid=3877893" இலிருந்து மீள்விக்கப்பட்டது