அ. பாண்டுரங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. பாண்டுரங்கன் (1936) என்பவர் தமிழ்ப் பேராசிரியர், இலக்கிய ஆய்வாளர், மற்றும் நூலாசிரியர் ஆவார்.

படிப்பு[தொகு]

இளங்கலை வகுப்பில் கணிதம் பயின்றபோதிலும் தமிழ் மொழியில் கொண்ட பற்றின் காரணமாக சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை படித்துப் பட்டம் பெற்றார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கம்பராமாயணத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மொழியியலில் பட்டயம் பெற்றார். பிரெஞ்சு மொழியிலும் பட்டயம் பெற்றார்.

பணிகள்[தொகு]

புதுவை அரசுக் கலைக்கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர் எனப் பதவிகளை வகித்தார். புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி இலக்கியப் புலத்தில் துறைத்தலைவராகவும் பேராசிரியராகவும் பணி புரிந்தார். 1997ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற இவருக்கு, பல்கலைக்கழக மானியக் குழு சிறப்புநிலைப் பேராசிரியர் பதவியை வழங்கியது. புதுதில்லியில் உள்ள இந்திய நாகரிங்கள் ஆய்வு மையத்தின் சார்பில் வெளியான ஆய்வுத் தொகுதிகளில் இவருடைய ஆங்கிலக் கட்டுரைகள் இடம்பெற்றன

எழுதிய நூல்கள்[தொகு]

  • என்றுமுள தென்றமிழ் (1988)[1]
  • காப்பிய நோக்கில் கம்பராமாயணம் (1989)
  • காப்பிய இயல் (1992)
  • தமிழாய்வு புதிய கோணங்கள் (1993)
  • வேதநாயகம் பிள்ளை (1994)
  • கம்பரும் வால்மீகியும் (2003)
  • தொகை இயல் (2008)
  • வாணிதாசன் (2009)
  • சான்றோர் கவி (2011)
  • Cankam Classics: New Perspectives

சான்றாவணம்[தொகு]

  1. Sutha (2012-07-27). "தமிழறிஞர் முனைவர் அ.பாண்டுரங்கன்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பாண்டுரங்கன்&oldid=3479755" இலிருந்து மீள்விக்கப்பட்டது