அகில இந்திய மாங்கனிக் கண்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகில இந்திய மாங்கனி கண்காட்சி என்பது கிருட்டிணகிரி மாவட்டத்தின் தலைநகரான கிருட்டிணகிரியில் ஆண்டுதொரும் நடைபெறும் ஒரு கண்காட்சியாகும். இந்தக் கண்காட்சி 1992 ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழக அரசு மற்றும் கிருட்டிணகிரி நகராட்சியால் நடத்தப்பட்டுவருகிறது. 2016 ஆம் ஆண்டு நடப்பது 24 வது மாங்கனி கண்காட்சி ஆகும். 2016 சூன் 25 ல் இருந்து 2016 16 சூலை வரை நடக்கிறது.[1]

மாவட்டத்தில் மா சாகுபடி 300,17 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. கிருஷ்ணகிரியின் முக்கிய பயிராக மாங்கனி உள்ளது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகிறது. மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஒரு பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் விளைவிக்கின்றது. மாம்பழம் பதப்படுத்தும் தொழில் அத்துடன் வளர்ந்து வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து அகில இந்திய மாங்கனி கண்காட்சியை காண கிருஷ்ணகிரிக்கு வருகிறார்கள்.[2] மாவட்ட ஆட்சியர் ஆண்டுதோறும் விழாவை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார். மேற்படி விழாவில் 30 நாட்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.[3] நாடு முழுவதிலும் இருந்து மாபெரும் கலைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்ககளை மகிழ்விப்பார்கள். அடுத்த ஆண்டு முதல் மாங்கனி கண்காட்சி சர்வ தேச அளவில் ஊக்குவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கபடுகிறது.[4]

படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]