ஆவாட் பௌனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோதுமை

ஆவாட் பௌனி (Aawat pauni (பஞ்சாபி: ਆਵਤ ਪਾਓੁਣੀ) என்பது பஞ்சாபி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து அறுவடை செய்யத் திரளும் ஒரு பாரம்பரியத் திருநாளாகும்[1]. வைசாக்கி மாதத்தில் இந்த அறுவடை நாள் மிகப் பிரபலமாக இருக்கும்.

ஆவாட் என்பதன் பொருள் ” வந்து சேருங்கள் “ அல்லது ” இங்கே வாருங்கள் “ என்பதாகும்[2]. இயந்திரங்களின் அறிமுகத்திற்கு முன்னர், உழவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அறுவடைக்காக அழைப்பர்[3]. இவர்கள் அதே கிராமத்தைச் சார்ந்தவர்களாகவோ அல்லது அண்மையில் உள்ள பிற கிராமத்தைச் சார்ந்தவர்களாகவோ இருப்பர். இவ்வழக்கம் முற்றிலுமாக இன்று அழிந்து போகவில்லை என்ற போதிலும் படிப்படியாக தேய்பிறை போல குறைந்து கொண்டே வருகிறது.

அறுவடைக்காக வருகின்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தினந்தோறும் மூன்று வேளை உணவு வழங்கப்படுவது வழக்கமாகும்[1]. பொதுவாக 20 ஆண்கள் கொண்ட குழுவினர் பஞ்சாப் மத்தளத்தின் இசைக்கு உகந்தபடி பாடிக்கொண்டே அறுவடை செய்வார்கள். தோகி என்ற நாட்டுப்புறப் பாடல் வகையிலான பாடல்களை அவர்கள் இசைப்பது வழக்கமாகும். இப்பாடல்கள் ஒலி பெருக்கி வாயிலாக ஒலிபரப்புவதற்கும் ஏற்ற பாடல்களாக உள்ளன.

ஆவாட் பௌனி நிகழ்வுக்கு வருகை தந்த உறவினர்களுக்கு பாரம்பரிய பஞ்சாப் உணவுகள் அளிக்கப்படுவது வழக்கம். சாகார் எனப்படும் தூய்மையான வெல்லம், நெய், வெண்ணெய், காரா எனப்படும் கோதுமை அல்வா, பாயசம், சேமியா, தயிர் மற்றும் பால் போன்றவை பஞ்சாபின் பாரம்பரிய உணவுகளில் அடங்கும்[1].

அதிக நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக விளங்கும் பெரும் நிலக்கிழார்கள், குடும்பத்தில் மரணம் அல்லது உழவு செய்யும் கால்நடைகள் மரணம் போன்ற எதிர்பாரா சம்பவங்களுக்கும் ஆவாத் பௌனி அழைப்பு நிகழும். ஆவாத் பௌனி என்பது ஒரு விதமான உதவி கேட்கும் நிகழ்வாகும்.

ஆவாட் பௌனி வகைகள்[தொகு]

  • அறுவடை
  • கூரை வேய்தல்
  • ஏற்கனவே அறுவடை செய்த பயிர்களில் ஒரு பகுதியை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்தளித்தல்

தோகி[தொகு]

மத்தளம்

ஆவாட் பௌனி கூட்டத்திலிருக்கும் ஒருவன் பாடுவான். உதாரணத்திற்கு ஒரு பாடல்:

ਕੋਠੇ ਉੱਤੇ ਕੋਠੜੀ, ਉਤੇ ਨਾਰ ਸੁਕਾਵੇ ਕੇਸ
ਕਿਤੇ ਯਾਰ ਦਿਖਾਈ ਦੇ ਗਿਆ ਬਦਲ ਕੇ ਭਰਾਵਾਂ, ਗਭਰੂਆ ਓ ਭੇਸ

ஆங்கிலத்தில்…

an extension upon a house, my lover is drying her hair
somehow my lover has given me a glimpse of her, oh brother, in disguise

தமிழில்:

வீட்டுக்கு வெளியே நீண்டு தெரிகிறது, என் காதலி தன் கூந்தலை உலர்த்துகிறாள்
எப்படியோ அவள் எனக்கொரு தரிசனம் தந்துவிட்டாள், அய்யோ அவள் சகோதரன் மாறு வேடத்தில்

குழுவில் உள்ள மற்றவர்கள் இரண்டாவது வரியில் இருந்து, அய்யோ அவள் சகோதரன் மாறு வேடத்தில் என்று இணைந்து பாடுவார்கள். மத்தளம் இப்புள்ளியில் உயர்ந்து ஒலிக்கும். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் ஒய்யாரமாக நடனம் ஆடுவதும் உண்டு[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Alop ho riha Punjabi virsa, Harkesh Singh Kehal, Unistar Book PVT Ltd., ISBN 81-7142-869-X
  2. "Glossary" (PDF). Shodhganga,inflibnet.ac.in. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
  3. "Chapter V : Gender and wor : Analysis" (PDF). Shodhganga.inflibnet.ac.in. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
  4. Dr Singh, Sadhu (2010) Punjabi Boli Di Virasat.Chetna Prakashan.ISBN 817883618-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவாட்_பௌனி&oldid=2695889" இலிருந்து மீள்விக்கப்பட்டது