ஓம்சுக் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம்சுக் மாகாணம்
Omsk Oblast
மாகாணம்
Омская область
ஓம்சுக் மாகாணம் Omsk Oblast-இன் கொடி
கொடி
ஓம்சுக் மாகாணம் Omsk Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்சைபீரியா[1]
பொருளாதாரப் பகுதிமேற்கு சைபீரியா[2]
நிர்வாக மையம்ஓம்ஸ்க்
அரசு
 • நிர்வாகம்சட்டமன்றம்
 • ஆளுநர்விக்டர் நினாரோவ்[3]
பரப்பளவு[4]
 • மொத்தம்1,39,700 km2 (53,900 sq mi)
பரப்பளவு தரவரிசை28வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5]
 • மொத்தம்19,77,665
 • Estimate (2018)[6]19,60,081 (−0.9%)
 • தரவரிசை24வது
 • அடர்த்தி14/km2 (37/sq mi)
 • நகர்ப்புறம்71.5%
 • நாட்டுப்புறம்28.5%
நேர வலயம்[7] (ஒசநே+6)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-OMS
அனுமதி இலக்கத்தகடு55
அலுவல் மொழிகள்உருசியம்[8]
இணையதளம்http://www.omskportal.ru/

ஓம்சுக் மாகாணம் (Omsk Oblast, உருசியம்: О́мская о́бласть, ஓம்ஸ்கயா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக மையம் ஓம்ஸ்க் ஆகும். இந்த மாகாணம் 139.700 சதுர கிலோமீட்டர் (53,900 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் மக்கள் தொகை 1,977,665 ( 2010 கணக்கெடுப்பு )[5] ஆகும். இதில் பெரும்பான்மையினரான 1.15 மில்லியன் மக்கள் நிர்வாக மையமான ஒம்ஸ்க் நகரத்திலேயே வாழ்கின்றனர். இதன் எல்லைகளாக வடக்கிலும், மேற்கிலும் தியூமென் ஒப்லாஸ்து, கிழக்கில் நோவஸிபிர்ஸ்க் மற்றும் தோம்ஸ்க் ஒப்லாஸ்து ஆகியவையும், தெற்கில் கசக்ஸ்தான் ஆகியவை அமைந்துள்ளன.

வரலாறு[தொகு]

தொல்லியல் கண்டுபிடிப்புகள்படி இந்த ஒப்ளாஸ்ட் பகுதியில் கடந்த 14,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் வசித்து வந்தனர் என்று சுட்டிக் காட்டுகின்றனர். புதிய கற்கால மக்கள் இப்பகுதியில் மீன் பிடித்து, வேட்டையாடி வாழ்ந்துவந்தனர். சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் இங்கு நிலையாக ஓரிடத்தில் வாழத் தொடங்கினர். பல்வேறு துருக்கிய நாடுகளின் ஆதிக்கத்தில் இப்பகுதி இடைக்கால சகாப்தம் முழுவதும் இருந்தது. இப்பகுதியில் ரசிய வரலாறு என்பது 1584இல் துவங்குகிறது. யேர்மார்க் என்பவரின் தலைமையிலான படைகள் இப்பகுதியின் உள்ளூர் ஆட்சியாளர்களைத் தோற்கடித்து இப்பிராந்தியத்தை இரசியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

பொருளாதாரம்[தொகு]

2008 ஆம் ஆண்டில் இருந்து, ஒம்ஸ்க் ஒப்லாஸ்து இரசியாவின் பிராந்தியங்களில் பொருளாதாரத்தில் 23வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பிராந்தியத்தின் மொத்த உற்பத்தி 10.2 பில்லியன் டாலர்கள் மதிப்பைக் கொண்டுள்ளது. ஒம்ஸ்க் ஒப்லாஸ்தின் தொழில் துறை நன்கு முன்னேறியுள்ளது. சேவைத்துறை, நிதித் துறைகள் மேலும் வளர்ந்து வருகின்றது, வேளாண்மை பொருளாதாரத்தில் சிறிய பங்கையே வகிக்கிறது என்றாலும், குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இப்பிராந்தியத்தில் அறுபத்தாறாயிரம் தனியார் நிறுவனங்கள் பதிவுபெற்றுள்ளன. இவற்றில் சிறுதொழில் விற்பனையாளர்கள் முதல் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலானஉற்பத்தியாளர்கள்வரை உள்ளனர். [9] 2008 ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் இரசியாவின் சிறந்த நகரங்களில் ஒம்ஸ்க்க்கு ஆறாவது இடத்தைத் தந்தது. அதற்கு முந்தைய ஆண்டு தரவரிசையில் 20 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.[10]

புவியியல்[தொகு]

ஒம்ஸ்க் ஒப்லாஸ்து வடக்கில் இருந்து தெற்காக 600 கிமீ நீளமும் கிழக்கிலிருந்து மேற்காக 300 கி.மீ. வரை பரவியுள்ளது. ஒப்ளாஸ்ட் புவியியல் லிர்டிஷ் ஆறும் அதன் கிளை ஆறுகளுமே பெரும்பங்கு வகிக்கிறன. இது மேற்கு சைபீரியாவன் ஒரு பகுதியாக உள்ளது. ஒப்ளாஸ்ட்டின் தெற்குப் பகுதி பெரும்பாலும் புல்வெளியாகவும் படிப்படியாக மரங்களடர்ந்த சமவெளிக் காடுகளைக் கொண்டதாகவும் உள்ளது. வடக்கில் சதுப்புநில தைகா காடுகள் உள்ளன.

காலநிலை[தொகு]

ஒப்ளாஸ்ட் உன்னதமான வெப்பநிலையைக் கொண்டுள்ளது. குளிர், பனி மழை, வெப்பம் மற்றும் வறண்ட கோடைக் காலம் என வேறுபட்ட தட்பவெப்பநிலையைக் கொண்டதாக உள்ளது, சராசரி சனவரி வெப்பநிலை -42 ° செமுதல் -30 ° செ வரையும், சராசரி சூலை வெப்பநிலை +28° செ இருந்து + 25 ° செ வரையும் சிலசமயம் 35 ° செ இல் இருந்து 40 ° செ வரை வரைகூட அடையும். சராசரி ஆண்டு மழைப் பொழிவு 300-400 மி.மீ. ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 1,977,665 ( 2010 கணக்கெடுப்பு ); 2,692,251 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 2,782,005 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

2012 முக்கிய புள்ளி விவரங்கள்

  • பிறப்பு: 29 475 (1000 ஒன்றுக்கு 14.9)
  • இறப்பு: 27 197 (1000 ஒன்றுக்கு 13.8) [11]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்[12]:

2009 - 1.58 | 2010 - 1.60 | 2011 - 1.66 | 2012 - 1.86 | 2013 - 1.87 | 2014 - 1.96 (இ)

2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இனக்குழுக்கள் விகிதம்:[5]

  • 85.8% ரஷியன்
  • 4.1% கசாக்
  • 2.6% ஜெர்மன்
  • 2.2% டாடர்
  • 0.3% பெலாரஷ்யர்கள்
  • 0.4% ஆர்மேனியர்
  • பிற இனக்குழுவினர் ஒவ்வொன்றிலும் இரண்டாயிரம் பேருக்கும் குறைவாக இருக்கலாம்.
  • 57.518 பேர் மக்கள் பதிவுகளில் தங்கள் இனத்தை அறிவிக்காதவர்கள் ஆவர்.[13]

மதம்[தொகு]

2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி ஒம்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35.7% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 3% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 2% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், 0.5% கத்தோலிக்க திருச்சபையினர். மக்கள் தொகையில் 39% ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 5.8% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Назаров Виктор Иванович - Губернатор Омской области. Viktor Nazarov, Governor of Omsk Oblast பரணிடப்பட்டது 2019-12-19 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  4. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  5. 5.0 5.1 5.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  7. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  8. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  9. Отчёт о работе администрации города Омска в 2005—2009 годах
  10. "Журнал "Forbes" - 30 лучших городов для бизнеса — 2010" (in Russian). May 27, 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-03-30.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  11. Естественное движение населения в разрезе субъектов Российской Федерации பரணிடப்பட்டது 2013-03-01 at the வந்தவழி இயந்திரம். Gks.ru. Retrieved on 2013-08-20.
  12. Каталог публикаций::Федеральная служба государственной статистики பரணிடப்பட்டது 2018-12-24 at the வந்தவழி இயந்திரம். Gks.ru (2010-05-08). Retrieved on 2013-08-20.
  13. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  14. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்சுக்_மாகாணம்&oldid=3425251" இலிருந்து மீள்விக்கப்பட்டது