கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெட்டுடையகாளியம்மன் கோயில் இது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள 18ம் நூற்றாண்டில் உருவான கோயில் ஆகும். இங்குள்ள மூலவர்: வெட்டுடையா காளி.

அமைவிடம்[தொகு]

கொல்லங்குடி இது சிவகங்கை மாவட்டத்தில் மதுரை - தொண்டி நெடுஞ்சாலையில் காளையார்கோயில் அருகே உள்ளது.

நம்பிக்கை[தொகு]

யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க ”நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு” என்று சொல்லும் வழக்கமும், அநியாயம் செய்யும் குற்றவாளிகளை அம்பிகை தண்டிப்பாள் என்ற நம்பிக்கையும் இங்கு உள்ளது.நம்பிக்கை துரோகம், பாதிப்பிற்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டி வழிபடும் வழக்கம் அரசு அனுமதியுடன் நடைபெறுகிறது.

தல வரலாறு[தொகு]

முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய ஐயனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார். கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் ஐயனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர். ஒருசமயம் நள்ளிரவில் ஐயனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு "வெட்டுடையார் காளி' என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே தலம் அழைக்கப்பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]