உமாங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமாங்கைட்டு
Umangite
கிளாசுதாலைட்டுடன் உமாங்கைட் பழுப்பு நிறம்
பிற தாமிர செலீனைடுகளுடன் இரண்டாம்நிலை பச்சை மற்றும் சால்கோமெனைட்டு போல உலோகத்தன்மைற்ற நீலம்)
பொதுவானாவை
வகைசெலீனைடு கனிமம்
வேதி வாய்பாடுCu3Se2
இனங்காணல்
நிறம்சிவப்பு, நீலச் சிவப்பு-கருப்பு
படிக இயல்புதிண்ணிய மணிகள்
படிக அமைப்புநான்முகம்
பிளப்பு[010] மற்றும் [001] அளவுகளில் தனித்துவமானது
முறிவுசமமற்றது
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி5.62 - 6.78
மேற்கோள்கள்[1][2][3]

உமாங்கைட்டு (Umangite) என்பது Cu3Se2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். தாமிர செலீனைடு கனிமமான இதை, 1891 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. உமாங்கைட்டு இயற்கையில் சிறு துகள்களாகவோ அல்லது சிறு மணிவடிவத்திலோ திரண்டு பிற சல்பைடு தொகுதி தாமிரக் கனிமங்களுடனோ தோன்றுகிறது. இக்கனிமத்தின் கடினத்தன்மை எண் 3 ஆகும். கருநீலம் மற்றும் செவ்வூதா நிறங்களில் கருப்புக் கோடுகளுடனும், உலோகத்தைப் போன்ற மிளிர்வுடனும் உமாங்கைட்டு கனிமம் காணப்படுகிறது.

அர்கெந்தீனாவின் லா ரியோயா மாகாணத்தில் அமைந்துள்ள சியெர்ரா டி உமாங்கோவில் கிடைக்கப்பெற்றதால் இக்கனிமம் உமாங்கைட்டு என்ற பெயரைப் பெற்றது. செருமனியில் ஆர்சு மலைத்தொடர் மற்றும் சுவீடனின் சிகிரிகெரம் போன்ற இடங்களிலும் இக்கனிமம் கிடைக்கிறது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாங்கைட்டு&oldid=2080325" இலிருந்து மீள்விக்கப்பட்டது