சையில்பிஷ் இயங்குதளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையில்ஃபிஷ்
Sailfish
நிறுவனம்/
விருத்தியாளர்
ஜோலா
இயங்குதளக் குடும்பம் லினக்சு
இணையத்தளம் sailfishos.org

சையில்ஃபிஷ் இயங்குதளம் (Sailfish OS, அல்லது SailfishOS[1] SFOS) என்பது ஒரு நகர்பேசி இயங்குதளம் ஆகும். இது லினக்சு அடிப்படையில் குறிப்பிட்ட வன்பொருளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கபட்டுள்ளது. ஜோலா நிறுவனத்தின் தனியுரிம பயனர் இடைமுகம், மேர் இடைபொருள் மற்றும் இதர மூன்றாம் நபர் கூறுகளை கொண்டுள்ளது.[2][3]

வரலாறு[தொகு]

இது ஜோலா நிறுவனத்தால் உருவாக்கபட்ட இயங்குமுறை ஆகும். இது நோக்கியா மற்றும் இன்டெல் உருவமைத்த "மீகோ" இயங்குமுறையில் இருந்து வடிவமைக்கபட்டது. இது 80% மீகோ குறியீடை பயன்படுத்துகிறது.

வசதிகள்[தொகு]

இது டல்விக் இயங்குநேரத்தை உள்ளே கொண்டுள்ளது, எனவே ஆண்ட்ராய்டு செயலிகள் இதிலும் இயங்கமுடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wachter, Bernd (Aard). "[Official announcement] Early access to SailfishOS releases". together.jolla.com. https://together.jolla.com. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015. {{cite web}}: External link in |publisher= (help)
  2. "Sailfish End User License Agreement". Jolla. பார்க்கப்பட்ட நாள் 30 November 2014.
  3. "Sailfish License Information". Jolla. Archived from the original on 1 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையில்பிஷ்_இயங்குதளம்&oldid=3480251" இலிருந்து மீள்விக்கப்பட்டது