உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
பெயர்
பெயர்:உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
அமைவிடம்
ஊர்:உறையூர்
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தான்தோன்றீஸ்வரர்
தாயார்:குங்குமவல்லியம்மன்

உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள உறையூர் எனும் பகுதியில் உள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் தான்தோன்றீஸ்வரர் என்றும், அம்பிகை குங்குமவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவில் குங்குமவல்லி தாயார் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோவில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்தமையாகும்.[1]

வரலாறு[தொகு]

உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் எனும் மன்னன், இந்திரனின் அனுமதியோடு நாக கன்னையான காந்திமதியை மணம்புரிந்தார். காந்திமதி சிறந்த சிவபக்தை. அவர் கற்பவதியாக இருக்கும் போது மலைக்கோட்டை தாயுமானவரை தரிசிக்க எண்ணம் கொண்டார். அதற்காக புறப்பட்டு செல்கையில் அவர் உடல் சோர்வுற்றது. இறைவனை காண முடியாமல் தன்னுடைய உடல் வாட்டுகிறதே என்றெண்ணி கண்ணீர் விட்டு வேண்டினார். அவருடைய பக்தியில் மனமிறங்கி சிவபெருமான் தாயுமானவராக அவருக்கு காட்சியளித்தார்.

அம்மனுக்கு வளைகாப்பு[தொகு]

இத்தளத்தின் அம்மனான குங்குமவல்லி தாயாருக்கு ஆண்டுக்கு இரு முறை வளைகாப்பு நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் தை 3வது வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மூன்று நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் - கர்ப்பிணிகள் அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களை காணிக்கையாக தருவர். இரண்டாம் நாள் - திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு கிடைக்க வளையல்களை காணிக்கையாக தருவர். மூன்றாம் நாள் - திருமண தடை, ஜாதக தோசம் உள்ளவர்கள் வளையல்களை காணிக்கையாக தருவர்.

இந்த மூன்று நாட்களிலும் பூசைக்குப் பின்னர் காணிக்கையாக கொடுத்த பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக தரப்படும்.[1]

களத்ரதோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், திருமண தடை நீங்கவும், சந்தானபாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் உண்டாகவும், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்காக வளைகாப்பில் பெண்கள் கலந்துகொள்கின்றனர்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "உறையூர் அம்மன் திருத்தலங்கள் - தினகரன்". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  2. "Dinakaran - உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் குங்குமவல்லி தாயாருக்கு 64வது ஆண்டு வளைகாப்பு திருவிழா". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.

வெளி இணைப்புகள்[தொகு]