பிரார்த்தனா தொம்பாரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரார்த்தனா தொம்பாரே
நாடு இந்தியா
தொழில் ஆரம்பம்2012
விளையாட்டுகள்வலது-கையாளர், இரு-கை பின் கையாட்டம்
பரிசுப் பணம்$28,735
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்70 - 56
பட்டங்கள்5ஐடிஎப்
அதிகூடிய தரவரிசைஎண்.209 (25 ஆகத்து 2014)
தற்போதைய தரவரிசைஎண். 471 (19 சனவரி 2015)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்72 - 54
பட்டங்கள்10 ஐடிஎப்
அதியுயர் தரவரிசைஎண். 274 (8 திசம்பர் 2014)
தற்போதைய தரவரிசைஎண். 274(19 சனவரி 2015)
பதக்கத் தகவல்கள்
இற்றைப்படுத்தப்பட்டது: 19 சனவரி 2015.

பிரார்த்தனா தொம்பாரே (Prarthana Thombare, 18 சூன் 1994) இந்தியப் பெண் டென்னிசு விளையாட்டுக்காரர் ஆவார்.

தொம்பாரே தனது ஐடிஎப் விளையாட்டுக்காலத்தில் மூன்று ஒற்றையர், ஏழு இரட்டையர் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆகத்து 25, 2014இல் உலகளவில் ஒற்றையரில் தனது மீச்சிறந்த தரவரிசையாக 335ஐ எட்டினார். திசம்பர் 8, 2014இல் இரட்டையரில் மீச்சிறந்த தரவரிசை எண் 325ஐ எட்டினார்.

ஃபெட் கோப்பையில் இந்திய அணிக்காக ஆடும் தொம்பாரேயின் வெற்றி-தோல்வி 6- 1 என்ற கணக்கில் உள்ளது.

2014ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகளின் டென்னிசில் சானியா மிர்சாயுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் வெங்கலப் பதக்கம் வென்றார்.[1][2][3][4]

2016ஆம் ஆண்டில் இரியோ டி செனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் டென்னிசு மகளிர் இரட்டையர் போட்டிகளில் சானியா மிர்சாயுடன் இணைந்து பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Indian pair of Sania-Prarthana settles for bronze". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 September 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
  2. "Prarthana given top billing in ITF event". Shrivathsa Sridhar. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 August 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
  3. "Asian Games: Yuki Bhambri, Sania-Prarthana settle for bronze". தி டெக்கன் குரோனிக்கள். 28 September 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
  4. "Players Prarthana Thombare". மகளிர் டென்னிசு சங்கம். பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
  5. "Who is Prarthana Thombare? Uncovering an inspiring journey overshadowed by the Paes-Bopanna mess". பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரார்த்தனா_தொம்பாரே&oldid=2720522" இலிருந்து மீள்விக்கப்பட்டது