துறவறப் புகுநிலை இயக்குநர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துறவறப் புகுநிலை இயக்குநர் என்பவர் கத்தோலிக்க திருச்சபையில் கத்தோலிக்க துறவறப் புகுநிலையினரை பயிற்றுவித்து உருவாக்கும் பணியையும் அதற்காக உள்ள இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்புடையத் துறவி ஆவார். துறவறப் புகுநிலையினரின் அழைத்தலைத் தெளிவாக உய்த்துணர்வதும் தேர்வுசெய்து பார்ப்பதும்; மற்றும் சபைக்குரிய நிறைவாழ்வை நடத்த அவர்களைப் படிப்டியாக உருவாக்குவதும் இயக்குநருடைய கடமையாகும்.

துறவறப் புகுநிலையினர் தங்களின் நேரத்தை இறைவேண்டலிலும்,  தியானத்திலும் செலவிட்டு இயேசுவின் வாழ்வையும் தூயவர்களின் வாழ்வையும் பின்பற்றி தங்களையே உறுவாக்கிக்கொள்ள வழிவகை செய்யது இப்பணியினை ஆற்றுவோரின் கடமை ஆகும். இப்பணிக்காலத்தில் இவர் ஒவ்வொரு புகுநிலையினரைப்பற்றியும் முறையான அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்கவேண்டும். இதனால் இவர்கள் மற்றக் கடமைகளால் தடை செய்யப்படாமல் தங்களது பணியைப் பயனுள்ள வகையில்; நிலையான விதத்திலும் நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

துறவறப் புகுநிலை இயக்குநர் சபையின் உறுப்பினராகவும் நிரந்தர வார்த்தைப்பாடு கொடுத்தவராகவும் முறைப்படி நியமிக்கப்பட்டவராகவும் இருக்கவேண்டும்.[1] அச்சபையானது குருக்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருந்தால் இவ்வியக்குநர் ஒரு குருவாக இருக்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தி.ச. 651