கத்தோலிக்க துறவறப் புகுநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்தோலிக்க துறவறப் புகுநிலை என்பது  கத்தோலிக்க சட்டம் மற்றும் மரபுப்படி, துறவற சபைகளில் சேர விருப்புவோர் அச்சபையில் சேர்ந்து எதிர்காலத்தில் அருட்சகோதரர்களாகவோ, சகோதரிகளாகவோ அல்லது துறவி ஆகவோ வாழ அவருக்கு உள்ள தகுதி மற்றும் தடைகளிலிருந்து விடுதலைப்பற்றி ஆராயும் நிலையினைக் குறிக்கும்.

துறவற புகுநிலைக்கு வரும் வேட்பாளர்களை உடனே துறவற உறுதிமொழி அளிக்க அனுமதிப்பதில்லை.[1] துறவறப் புகுநிலைக்கான காலத்தை அவர்கள் நிறைவு செய்திருக்கவேண்டும். பொதுவாக இத்தகையோரின் தங்கும் இடங்கள்  மடத்தின் தனி பகுதிகளில் இருக்கும். முக்காலத்தில் பல்வேறு சபைகள் இந்த நிலைக்கான கால அளவும் மற்றும் சட்டங்களை தங்களுக்கென வகுத்திருந்தன. எனினும், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் விளைவாக தெரிந்து பொதுச்சங்கம் இவற்றை பொது விதியாக மாற்றியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தி.ச. 648