எ பிட்டர்ஸ்வீட் லைப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ பிட்டர்ஸ்வீட் லைப்
இயக்கம்கிம் ஜீ-வூண்
கதைகிம் ஜீ-வூண்
நடிப்புலீ பியுங் ஹுன்
கிம் யியோங்-கேல்
சின் மின்-ஹா
ஹூவாங் ஜங்-மின்
லீ கீ-யங்
ஒளிப்பதிவுகிம் ஜீ-வூண்
விநியோகம்சிஜெ எண்டர்டெயின்மென்ட்
வெளியீடுஏப்ரல் 1, 2005 (2005-04-01)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
ரஷ்யன்
பிலிப்பினோ
மொத்த வருவாய்ஐஅ$7,582,393[1]

எ பிட்டர்ஸ்வீட் லைப் () 2005ல் தென்கொரியாவில் வெளிவந்த திரைப்படமாகும். இதனை கிம் ஜீ-வூண் எழுதி இயக்கியிருந்தார்.[2] இத்திரைப்படத்தில் லீ பியுங் ஹுன் பிரதான கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். கொரியாவின் வாழும் குண்டர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் இப்படத்தில், அதிக வன்முறை காட்சிகள் இருந்தன. இருப்பினும் கொரியாவில் நல்ல வசூலைப் பெற்றுத்தந்தது.

கதைச் சுருக்கம்[தொகு]

கதாநாயகன் கொரியாவில் வாழும் குண்டர்களில் திறமையானவன். தன்னுடைய முதலாளிக்கு ஏழு வருடங்களாக விசுவாசமாக வேலைசெய்கிறான். ஆனால் அவர் கொடுத்த சிறிய வேலையான ஒரு பெண்ணை கொல்லமுடியாமல் தவிக்கிறான். அதனை அறிந்த முதலாளிக்கும் கதாநாயகனுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களே படம்.

கதை[தொகு]

கிம்-சுன்-வூ குண்டர்களில் தன்னுடைய முதலாளி காங்கிக்கு விசுவாசமாக வேலை செய்பவனாக இருக்கிறான். ஏழு வருடங்களில் முதலாளி கொடுத்த எல்லாப் பணிகளையும் சரியாக செய்து பெயர் பெற்றிருக்கிறார். மூன்றுநாள் பயணமாக வெளிநாடு செல்லும் காங், அதற்கு முன் கிம்மிடன் தன்னுடைய ரகசிய காதலியை கண்காணிக்க சொல்கிறார். அவளுக்கு இளைஞன் ஒருவனுடன் காதல் இருப்பதாகவும், அவர்கள் எல்லை மீறினால் தன்னை கைபேசியில் அழைக்கவோ அல்லது இருவரையும் கொலை செய்துவிடும்படியோ காங் கட்டளையிடுகிறார்.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ_பிட்டர்ஸ்வீட்_லைப்&oldid=2908497" இலிருந்து மீள்விக்கப்பட்டது