தமிழ்நாடு சிறப்புக் காவல் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு சிறப்புக் காவல் படை என்பது தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தமிழக காவல்துறையின் துணை நிலை அமைப்பாகும். இந்த படைப்பிரிவு பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்டுள்ளது. கலவர காலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் காலங்களிலும் இப்படை உபயோகப்படுத்தப்படுகிறது.[1]

நிர்வாகம்[தொகு]

தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவல் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரியால் நிர்வகிப்படுகிறது.அவருக்கு உதவியாக 1 கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரியும் 3 துணைக் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அதிகாரிகளும் பணிபுரிகின்றனர்.[2]

அமைப்பு[தொகு]

தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 7 படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 7 படைப்பிரிவுகளில் 2 படைப்பிரிவுகள் பெண்கள் படைப்பிரிவு ஆகும். ஒரு படைப்பிரிவு என்பது ஒரு காவல் ஆய்வாளர்,நான்கு உதவி காவல் ஆய்வாளர்,12 ஹவில்தார்,18 நாயக், 90 காவலர்,நான்கு சமயல்காரர், இரண்டு துணி வெளுப்போர், ஒரு முடி திருத்துவோர் ஆகியோரைக் கொண்டுள்ளது.[3]படைப்பிரிவின் தலைவர் காவல் ஆய்வாளர் ஆவார்.

அதிகாரங்கள்[தொகு]

தமிழ்நாடு சிறப்புக் காவல் படை கைது செய்யும் அதிகாரத்தையோ அல்லது புலனாய்வு செய்யும் அதிகாரத்தையோ பெற்றிருக்கவில்லை. கலவர காலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் காலங்களிலும் உள்ளூர் காவல் துறையின் வழிகாட்டுதலின் படி இப்படை இயங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]