காப்பீட்டு ஆவணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காப்புறுதி ஆவணம் அல்லது காப்பீட்டு ஆவணம் (insurance policy) என்பது காப்பீடு அளிப்பவருக்கும், காப்பீடு பெறுபவருக்கும் இடைப்பட்ட ஒரு பொதுவான நிலையான ஒப்பந்தம் ஆகும். இதன்படி காப்பீடு பெற்றவர்கள் முறையான ஆவணங்கள் கொண்டு தேவையான நேரத்தில் காப்பீடு அளிப்பவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ள முடியும்.[1]

பிற வகையான ஒப்பந்தங்களில் உள்ள சிறப்பம்சங்களைவிட காப்புறுதி கொள்கைக்கான ஒப்பந்தங்கள் சிறப்புற வடிவமைக்கப்பட்டு, அதற்கான தனிப்பட்ட வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கும். காப்புறுதி கொள்கை நிலையான படிவங்களாக இருப்பதால், அவை பாய்லர்ப்ளேட் எனும் மொழிப்படி குறிப்பிடப்படுகின்றன.

காப்புறுதி கொள்கை என்பது பொதுவாக ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்பந்தமாகும், இந்த கொள்கையில் காப்பீடு அளிப்பவருக்கும், காப்பீடு பெறுபவருக்குமான அனைத்து படிவங்கள் மற்றும் செய்திகள் இடம்பெற்றிருக்கும். இருப்பினும் இறுதி ஒப்பந்தம் முடிந்தபின்னர் அனுப்பப்படும் துணை கடிதங்கள் மற்றும் இதர எழுத்து சார்பான ஆவணங்கள் காப்புறுதி கொள்கையினை ஒருங்கிணைப்பற்றதாக மாற்றும். ஒரு காப்புறுதி கொள்கை புத்தகத்தின்படி “காப்புறுதி கொள்கை அளிக்கப்படும்போது வழங்கப்பட்ட, ஒப்பந்தத்திற்கான ஒவ்வொரு விளக்கமும், அதன் பின்னர் காப்பீடு அளிப்பவர் மற்றும் காப்பீடு பெறுபவர் இருவரின் சம்மதத்துடன் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும் நீதிமன்றத்தின் முதற்படியான விவாதங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்”. அத்துடன் காப்புறுதி கொள்கை, கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற ஆவணங்கள் பற்றி தெளிவுற குறிப்பிட வேண்டும். இவைதவிர பேச்சுக்கள் வழியாக பரிமாறப்படும் காப்புறுதி கொள்கைகள் ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளப்படாது. அவை காப்புறுதி கொள்கைகள் பட்டியலிலும் வராது.[2] விளம்பர பொருட்கள் மற்றும் சுற்றறிக்கைகளும் காப்புறுதி கொள்கை ஆவணங்களில் இடம்பெறாது.

அமைப்பு[தொகு]

முந்தைய காலகட்ட காப்பீட்டு கொள்கைகள் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தகுந்தாற்போல் எழுதப்பட்டன, அவற்றில் பிரச்சினைகள் தெளிவுற குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றிற்கான பண மதிப்பும் தெளிவுற தனித்தனியே கணக்கிடப்படும். இந்த முறையிலான காப்பீட்டு அமைப்பு இரண்டாம் தொழில் புரட்சி வரும்போது நிலைத்தன்மையற்றதாகக் கருதப்பட்டது. இந்த முறையில் அதிக ஆபத்துக்கள் இருப்பதாகவும் உணர்ந்தனர். உதாரணமாக, 1926 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண கடை நடத்துபவர் பின்வரும் தலைப்புகளின்கீழ் காப்பீட்டினைப் பெற்றிருக்க வேண்டும். அமைப்பு உருவாக்க செயல்முறைகள், ஓட்டுநர் பாதுகாப்பு, உயர்தூக்கிகள், தயாரிப்பு பொறுப்பு, ஒப்பந்த பொறுப்பு மற்றும் உரிமையாளரின் பாதுகாப்பு பொறுப்பு.[3]

1941 ஆம் ஆண்டில், பழைய முறையிலான காப்பீட்டு அமைப்பில் இருந்து தற்போது பயன்படுத்தும் காப்பீட்டு அமைப்பிற்கு மாறியது. அனைத்து விதமான ஆபத்துக்கள் மற்றும் விபத்துக்களுக்கான ஒரே காப்பீட்டு முறையாக அனைத்தும் மாறியது. அனைத்து விஷயங்களுக்கும் சேர்ந்து ஒரே மாதிரியான காப்பீட்டு கொள்கை உருவாக்கப்பட்டது. (உதாரணம்: இந்த காப்பீட்டுக் கொள்கையின் கீழ் வரும் இதர பொருட்களான.... என இதன்கீழ் வரும் தலைப்புகள் பட்டியலிடப்படும்). பின்னர் அவற்றில் இருந்து சிலவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. (உதாரணம்: இந்த காப்பீட்டு ஆவணம் இவற்றிற்கு மட்டும் பொருந்தாது....என ஒரு பட்டியல் உருவாக்கப்பட்டது) காப்புறுதி ஒப்பந்தத்தின் பகுதிகள் காப்புறுதி ஒப்பந்தத்தின் பகுதிகளாக பின்வருவன அமைந்துள்ளன. அறிவிப்புகள், வரையறைகள், காப்பீட்டு ஒப்பந்தம், விதிவிலக்குகள், நிபந்தனைகள் மற்றும் ஒப்புதல்கள்.[4] இவற்றின் துணைகொண்டு காப்புறுதி கொள்கைகளை தெளிவுற புரிந்துகொள்ள இயலும். அவற்றில் வரையறைகள் மற்றும் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட விதிகள் குறிப்பிடப்படும்.

தொழில்துறை சார்ந்த நிலையான படிவங்கள்[தொகு]

அமெரிக்காவில், சொத்து மற்றும் விபத்து காப்பீட்டாளர்கள் தங்களது காப்புறுதி கொள்கைகளில் ஒரே மாதிரியான மொழியினை பயன்படுத்துவர். இவை சில காப்புறுதி ஆலோசனை மையங்களான, காப்புறுதி சேவைகளின் அலுவலகம் மற்றும் அமெரிக்க காப்புறுதி சேவைகளின் குழுமம் ஆகியவற்றினால் ஆதரிக்கப்படும். காப்பீட்டாளர்கள் தாங்கள் அளிக்கும் விளக்கங்கள் மற்றும் படிவங்கள் அமெரிக்க அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என காப்புறுதி கொள்கைதாரர்கள் கொண்டிருக்கும் வருத்தத்தினை நீக்கி, ஒழுங்குமுறை சுமையினை குறைக்கும் பணிகளை இந்த காப்புறுதி கொள்கை ஆலோசனை மையங்கள் செய்கின்றன.[5]

நுகர்வோர் தங்களுக்குத் தேவையான கொள்கை ஒப்பீடுகளை உடனடியாக பார்க்க இவை வழிசெய்கின்றன, இருப்பினும் நுகர்வோர் விருப்பத்திற்குத் தகுந்தாற்போல் விலை நிர்ணயிக்கப்படும். குறிப்பிட்ட வகையான காப்புறுதி படிவங்களுக்கு நீதிமன்றம் அளிக்கும் பொருள்விளக்கங்கள் மற்றும் குறுக்கீடுகள் அனைத்தும் அதே வகையான ஆலோசனை மையங்களுக்கு எளிதாக அமைந்துவிடும், இவை பிற ஆலோசனை மையங்களுக்குத் தகுந்தவாறு அவற்றின் காப்புறுதி கொள்கைகளுக்கு ஏற்றவாறு மாறும். நுகர்வோருக்குத் தேவையான காப்பீட்டு கொள்கைகளை அவர்களின் மதிப்பிற்குத் தகுந்தாற்போல் பெற்றுக்கொள்ள பல தனியார் நிறுவனங்களும் உதவுகின்றன. பிற கொள்கைகளின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்களை எடுத்துரைத்த பின்னர் நுகர்வோரிடன் இருந்து காப்புறுதி கொள்கைகளின் ஒப்புதல் பெறுகின்றனர்.

தற்போதைய காலகட்டத்தில், காப்பீடு பெறுபவர்கள் நிலையான படிவங்களில் பல மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் தனிப்பட்ட வழிமுறைகள் கையாள்வதுடன், நிலையான படிவங்கள் மற்றும் கொள்கைகளில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்கவும் மறுக்கின்றனர்.[6] உதாரணமாக, வீட்டு காப்பீட்டு கொள்கைகளில் பல இடங்களில் வெவ்வேறு விதிகளைக் கொண்டிருக்கும். மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கடமை காப்பீடுகள் மற்றும் தனிப்பட்ட காப்பீடுகள் போன்ற சில பகுதிகளில் சிறிது தொழில்முறை சார்ந்த காப்பீட்டு விதிமுறைகளும் குறிப்பிடப்பட வேண்டும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Donating life: Both giver and recipient can benefit from insurance". economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  2. "Know more details about Insurance Policy - Turtlemint". turtlemint.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  3. "Directors & Officers Liability Is Not Your Normal Insurance Product". insurancejournal.com. 14 May 2013. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  4. "Insurance Coverage Litigation". wklawbusiness.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Policy Issues: ISO Program Revisions". propertycasualty360.com. 2 August 2013. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  6. "Time To Standardize Personal Umbrella Insurance Policies". irmi.com. Archived from the original on 17 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பீட்டு_ஆவணம்&oldid=3915065" இலிருந்து மீள்விக்கப்பட்டது