தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 என்பது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் ஒன்று ஆகும். அரசியலமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் ஆகும். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன. இவ்விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன. இந்த விதிகளின்படிதான் சட்டப்பேரவை நடத்தப்படவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை அவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில் கூறப்பட்டுள்ளது.[1]

உட்கூறுகள்[தொகு]

  1. பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப்பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.[2]
  2. அவ்வறிக்கையின் மீது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.
  3. விதி எண்-110 ன் கீழ் சட்டசபையில் முதல்வர் பேசினால் அது விவாதத்துக்கு வராது. அதைப் பற்றி விவாதிக்கக் கூடாது.
  4. உள் விதி 1-இன் கீழ்அறிக்கையளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்நாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன்கூட்டியே சட்டப்பேரவை செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அவசர அறிவிப்புக்குரியது 110 விதி". தமிழ் முரசு. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "இதுவரையிலான 'பேரவை விதி 110' அறிவிப்புகளின் நிலை என்ன?- கருணாநிதி கேள்விப் பட்டியல்". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகஸ்டு 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அவசர அறிவிப்புக்குரியது 110 விதி". அறிவு நெட். பார்க்கப்பட்ட நாள் 20 மே 2016.