கல்லோயா தேசிய வனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லோயா தேசிய வனம்
சேனநாயக்கா சமுத்திரத்திற்கு அருகில் கல்லோயா தேசிய வனம்
Map showing the location of கல்லோயா தேசிய வனம்
Map showing the location of கல்லோயா தேசிய வனம்
சேனநாயக்கா சமுத்திரத்தின்
அமைவிடம்ஊவா, கிழக்கு மாகாணங்கள், இலங்கை
அருகாமை நகரம்அம்பாறை
பரப்பளவு25,900 ha
நிறுவப்பட்டதுபெப்ருவரி 12, 1954
நிருவாக அமைப்புவனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம்

கல்லோயா தேசிய வனம் (Gal Oya National Park) 1954 இல் சேனநாயக்கா சமுத்திரத்தின் பிரதான நீர் தோக்கப் பகுதியாக உருவாக்கப்பட்டது. சேனநாயக்கா சமுத்திரம் கல்லோயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இக்கினியாகலையில் 1950 இல் ஏற்படுத்தப்பட்டது. கல்லோயா தேசிய வனத்தில் முக்கிய விடயமாக யானைக் கூட்டத்தைக் குறிப்பிடலாம். மூன்று முக்கிய ஆயுர்வேத மருத்துவ மூலிகைகளாக கடுக்காய், தான்றி, நெல்லி என்பவற்றுடன் ஏனைய தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன. 1954 முதல் 1965 வரை கல்லோயா அபிவிருத்தி சபையால் இவ்வனம் நிறுவகிக்கப்பட்டது. பின்பு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டது. தேசிய வனம் கொழும்பிலிருந்து 314 கிமி தூரத்தில் அமைந்துள்ளது.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Gal Oya National Park". info.lk. Archived from the original on 2009-12-04. பார்க்கப்பட்ட நாள் 2009-07-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லோயா_தேசிய_வனம்&oldid=3548360" இலிருந்து மீள்விக்கப்பட்டது