புவெப்லா சண்டை

ஆள்கூறுகள்: 19°03′00″N 98°12′00″W / 19.0500°N 98.2000°W / 19.0500; -98.2000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவெப்லா சண்டை
மெக்சிக்கோவில் பிரான்சியத் தலையீடு பகுதி

லோரெட்டோ கோட்டையின் கீழ் மெக்சிக்கோவின் குதிரைப்படை பிரான்சியத் துருப்புக்களை வெற்றி கொள்வதைக் காட்டும் ஓவியம்
நாள் மே 5, 1862
இடம் புவெப்லா, மெக்சிக்கோ
மெக்சிக்கோ குடியரசின் வெற்றி[1][2]
மெக்சிக்கோ குடியரசுக்கு அரசியல் வெற்றி[1]
பிரிவினர்
மெக்சிக்கோ இரண்டாம் மெக்சிக்கோ கூட்டுக் குடியரசு பிரான்சு பிரான்சிய இராச்சியம் மெக்சிக்கோ மெக்சிக்க சீர்மக்கள்
தளபதிகள், தலைவர்கள்
மெக்சிக்கோ இக்னாசியோ சரகோசா பிரான்சு சார்லசு டெ லோரென்செசு
பலம்
4,500-12,000[3] 6,500 துருப்புக்கள்[3][4]
இழப்புகள்
87 கொல்லப்பட்டனர்,
131 காயமுற்றனர்,
12 காணவில்லை
491 கொல்லப்பட்டனர்,
~300 காயமுற்றனர்,
8 பிடிபட்டனர்

புவெப்லா சண்டை (Battle of Puebla) மெக்சிக்கோ மீது பிரான்சு தொடுத்தப் போரின்போது மே 5, 1862 அன்று புவெப்லா நகருக்கு அருகில் நடந்தது. இந்தச் சண்டையில் ஆக்கிரமித்திருந்த பிரான்சியப் படைகளை அளவிலும் அனுபவத்திலும் குறைவான மெக்சிக்கோவின் படை வீழ்த்தியது மெக்சிக்கோவின் வரலாற்றில் ஓர் முதன்மை நிகழ்வாகக் காணப்படுகின்றது. அடுத்தடுத்த சண்டைகளில் பிரான்சு மெக்சிக்கோவை வென்று தனது இராச்சியத்தை நிலைநிறுத்தியபோதும் படைபலமிக்க பிரான்சியர்களை[5] வென்றது மெக்சிக்க படையினருக்கு ஊக்கமூட்டுவதாகவும் பிரான்சிய முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும் அமைந்தது. இந்தச் சண்டையில் 10,540 துருப்புக்கள் ஈடுபட்டனர். 462 பிரான்சியத் துருப்புக்கள் கொல்லப்பட்டனர். 83 மெக்சிக்கத் துருப்புக்கள் மட்டுமே இச்சண்டையில் உயிரிழந்தனர்.

இந்த மெக்சிக்கோவின் வெற்றி ஒவ்வொரு ஆண்டும் மே 5 அன்று கொண்டாடப்படுகின்றது. மெக்சிக்கோவில் முதன்மையாக புவெப்லா மாநிலத்தில்[6][7][8][9] எல் டியா டெ லா பேட்டலா டெ புவெப்லா (தமிழ்: புவெப்லா சண்டை நாள் ) எனக் கொண்டாடப்படுகின்றது.[10][11][12] மெக்சிக்கோவின் பிற பகுதிகளில் இந்நாளைக் குறித்த கொண்டாட்டங்கள் மிகுதியாக இல்லை. இருப்பினும் இது ஐக்கிய அமெரிக்காவில் குறிப்பாக மெக்சிக்கோ மக்கள் மிகுதியாக வாழும் கலிபோர்னியா, டெக்சாசு மாநிலங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது; ஆண்டுதோறும் இந்நாள் சிங்க்கோ டே மாயோ எனக் கொண்டாடப்படுகின்றது. அன்றைய நாளில் மெக்சிக்கோ மதுவகைகள், உணவு வகைகள் மற்றும் பண்பாடு குவியப்படுத்தப்படுகின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Christopher Minster (2011). "Latin American history: Cinco de Mayo/The Battle of Puebla". About.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2011.
  2. Booth, William (5 May 2011). "In Mexico, Cinco de Mayo a more sober affair". The Washington Post. http://www.washingtonpost.com/world/americas/in-mexico-cinco-de-mayo-is-a-more-sober-affair/2011/05/05/AFq0Om0F_story.html. பார்த்த நாள்: 17 November 2011. 
  3. 3.0 3.1 "Cinco de Mayo". Mexico Online. 2007-04-25. பார்க்கப்பட்ட நாள் 17 November 2011.
  4. DeRouen, Karl R.; Heo, Uk (2005). Defense and security: a compendium of national armed forces and security policies. Santa Barbara, CA: ABC-CLIO. பக். 472. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85109-781-4. http://books.google.com/books?id=wdeBgfmZI0cC&pg=PA472. பார்த்த நாள்: 17 November 2011. 
  5. கீழ்வரும் சான்றுகளில் இக்னாசியோ சரகோசா தலைமையில் 12,000 படையினர் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன : காண்க The Cinco de Mayo and French Imperialism - HICKS Peter, Fondation Napoléon, and General Gustave Léon Niox book, Expédition du Mexique : 1861-1867, published in 1874 by Librairie militaire de J. Dumaine, p. 162 Read online
  6. "Cinco de Mayo". Mexico Online: The Oldest and most trusted online guide to Mexico.
  7. Lovgren, Stefan (2006-05-05). "Cinco de Mayo, From Mexican Fiesta to Popular U.S. Holiday". National Geographic News.
  8. List of Public and Bank Holidays in Mexico April 14, 2008. This list indicates that Cinco de Mayo is not a día feriado obligatorio ("obligatory holiday"), but is instead a holiday that can be voluntarily observed.
  9. Cinco de Mayo is not a federal holiday in México Accessed May 5, 2009
  10. Día de la Batalla de Puebla. 5 May 2011. "Dia de la Batalla de Puebla: 5 de Mayo de 1862." பரணிடப்பட்டது 2012-03-24 at the வந்தவழி இயந்திரம் Colegio Rex: Marina, Mazatlan. Retrieved 25 May 2011.
  11. Día de la Batalla de Puebla (5 de Mayo). Guia de San Miguel. Retrieved 25 May 2011.
  12. Happy “Battle of Puebla” Day. Retrieved 25 May 2011.

வெளியிணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=புவெப்லா_சண்டை&oldid=3778403" இலிருந்து மீள்விக்கப்பட்டது