தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை (T. Ramakrishna) (பி. 1854 - இ. மார்ச் 2, 1920) ஆங்கில நாவலை எழுதிய முதல் தமிழராவார்.[சான்று தேவை] இவர் எழுதிய பத்மினி (Padmini: Tale of Indian Romance) என்ற நாவல் இலண்டனிலிருந்து 1903-இல் வெளிவந்துள்ளது.[சான்று தேவை] இவரே கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை அவரது மறைவுக்குப் பிறகு மறுபதிப்பு செய்துள்ளார்.[சான்று தேவை] சென்னைப் பல்கலைக்கழக தமிழ்க் குழு, தமிழ் லெக்சிகன் என்ற அகராதி தயாரிப்புக் குழு ஆகியவற்றின் முதல் தலைவராக செயலாற்றியிருக்கிறார்.[சான்று தேவை] தனது நாட்குறிப்புகளுக்காகப் புகழ்பெற்ற ஆனந்தரங்கம் பிள்ளையின் உறவினராவார். அமெரிக்க கீழைத்தேயவியல் கழகத்தின் நிரந்தர உறுப்பினராகவும், அரசவை வரலாற்றுக் கழகத்தின் (Royal Historical Society) உறுப்பினராகவும் இருந்தவர். "ராவ் சாகிப்" பட்டம் பெற்றவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் துபாசியாக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

செங்கல்பட்டில் பிறந்து காஞ்சிபுரத்தில் பிரி சர்ச் ஆப் ஸ்காட்லாந்து மிசன் பள்ளியில் படிப்பைத் துவங்கி பின் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் மெட்ரிகுலேசன், எப்.ஏ (தருக்கம்), பி.ஏ (தத்துவம்) ஆகிய படிப்புகளை முடித்தார். 'சென்னை இலக்கிய சங்க' (ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி) நூலகத்தின் தலைவர் பொறுப்பில் அமர்ந்து இருபதாயிரம் நூல்களுடன் புழங்கியது இவரது எழுத்தாளுமைக்கு உரமூட்டியது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை வட்டார மொழியான தமிழைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட சிலர் முன்மொழிந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்து தமிழ் தொடர்ந்திட வாதிட்டு அத்தீர்மானம் நிறைவேறாது செய்திருக்கிறார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • Seetha and Rama: A Tale of Indian Famine (1877)
  • Tales of Ind and Other Poems (1896)
  • Padmini: Tale of Indian Romance (1903)
  • Early Reminiscences of T. Ramakrishna (1907)
  • Dive for Death (1911)
  • Life in an Indian Village (1911)
  • Visit to the West

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]