தவாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தவாப் (அரபு மொழி: طواف‎, Ṭawāf; literally சுற்றி வருதல்) என்பது இஸ்லாமிய கடமையான ஹஜ் செயல்களில் ஒன்றாகும். ஹஜ் மற்றும் உம்றா போது, முஸ்லிம்கள் காபாவை ஏழு முறை இடஞ்சுழியாக சுற்றி வருவர்.[1] காபாவை சுற்றி வருவதற்கு தவாப் என்பர்.

தவாப் செய்யும் விதம்[தொகு]

தவாஃபின் பொழுது சுற்றிவரும் முறை

சுற்றி வருதல் காபா மூலையில் கறுப்புக் கல் ( அல்- ஹஜர் அல்- அஸ்வத் ) இருந்து தொடங்குகிறது.யாத்திரிகர்கள் ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் போது கறுப்புக்கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர்.ஆனால் இன்றைய நவீன காலத்தில் பெருங்கூட்டம் ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதால் அனைவரும் அக்கல்லை முத்தமிடுவது சாத்தியமற்றது.ஆகவே ஒவ்வொரு சுற்றின் போதும் அந்த கல்லின் திசையை சுட்டிக்காட்டுவது ஏற்கத்தக்கது.

தவாப் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்வார்கள். தவாஃபின் பொழுது சாப்பிடக் கூடாது அனால் தாகத்தை தவிர்க்கத் தண்ணீர் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளையும் ஓடிச் செய்ய வேண்டும், மீதம் உள்ள நான்கை நடந்து செய்யலாம்.[2]

தக்பீர்[தொகு]

இறைவனை நினைவுகூரும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். ‘அல்லாஹு அக்பர்’ போன்ற வார்த்தைகளைக் கூறுவர். முதலில் வரும் மூன்று சுற்றுகளிலும் இவை நிச்சயமாக சொல்ல வேண்டும். அனால் பலரும் ஏழு சுற்றுகளிலும் இதை சொல்லுவார்கள்.

தொழுகை[தொகு]

தவாஃப் செய்து முடித்தவுடன் ஹாஜிகள் மகாமு இப்ராஹீம் எனப்படும் இப்ராஹீமின் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இந்தப் இடம் கஃபாவின் அருகில் இருக்கிறது. எனவே கூட்ட நெரிசலை தடுக்க பள்ளியில் உட்கட்டினுள்ளாக எங்கு வேண்டுமானாலும் இவ்வாறு தொழலாம்.

முக்தாஃப்[தொகு]

கஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இந்த பாதையை முக்தாஃப் என்று அழைப்பர். கூட்ட நெரிசலின் காரணமாக இப்பொழுது பள்ளிவாயிலின் மேல்தளத்திலும் தவாஃப் செய்யப்படுகிறது.

பல்வேறு தவாப் நிலைகள்[தொகு]

தவாப் அஸ்-சியாராஹ்[தொகு]

இன்று ஹாஜிக்கள் அனைவரும் மக்காவில் உள்ள அல்-ஹராம் பள்ளிவாயலுக்கு, மற்றொரு தவாஃப் செய்வதற்கும், கஃபாவைச் சுற்றி வருவதற்கும் செல்கின்றனர். இது 'தவாப் அஸ்-சியாராஹ்' அல்லது 'தவாப் அல் இபாதா' என்று அழைக்கப்படுகிறது. இது இறைவன் மேல் அவர்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் பற்றுறுதியைக் குறிப்பதாகும்.

தவாபுல் விதாஃ[தொகு]

இறுதியாக ஹாஜிகள் அனைவரும் மக்காவிற்கு பயணிக்கும் முன்னர் கடைசியாக ஒரு தவாஃப் செய்யவேண்டும். இதன் பெயரே தவாபுல் விதாஃ என்பதாகும்.'விதாஃ' என்றல் விடை கொடுத்தல் என்று பொருள்.[3]

தவாப் அல் உம்றா[தொகு]

இது உம்றா செய்யும் ஹாஜிகள் தனியாக செய்யும் தவாப் ஆகும்.இது உம்றா தவாப் எனப்படுகிறது.

தவாப் அல் தஹியா[தொகு]

இது காபாவினுள் நுழைந்தவுடன் ஹாஜிகள் செய்யும் தவாப் ஆகும்.காபாவில் நுழையும் ஒவ்வொரு தடவையும் இந்த தவாப் செய்வது முஸ்தஹப் ஆகும்.

தவாப் அல் குதூம்[தொகு]

இது புனித மக்கா நகரத்தினுள் நுழைந்தவுடன் ஹாஜிகள் செய்யும் தவாப் ஆகும்.இது வருகை தவாப் எனப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவாப்&oldid=3849456" இலிருந்து மீள்விக்கப்பட்டது