செர்சோ லியோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்ஜோ லியோனி
Sergio Leone
பிறப்பு(1929-01-03)3 சனவரி 1929
உரோம், லாசியோ, இத்தாலி
இறப்பு30 ஏப்ரல் 1989(1989-04-30) (அகவை 60)
உரோம், லாசியோ, இத்தாலி
பணிஇயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1959–1984
வாழ்க்கைத்
துணை
கார்லா லியோனி
பிள்ளைகள்பிரான்செசுக்கா
இராபேலா (பிறப்பு 1961)
ஆண்ட்ரியா
Sergio Leone (1975)

செர்சியோ லியோனி (Sergio Leone, இத்தாலிய ஒலிப்பு: செர்ஜோ லெயோனெ; 3 சனவரி 1929 – 30 ஏப்ரல் 1989) இத்தாலிய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராவார். "இசுப்பகட்டி வெசுட்டர்ன்" என அறியப்படும் திரைப்படப் பாணியை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.[1][2]

இவரது திரைப்படங்களில் மிகவும் அண்மைநிலைக் காட்சிகளும் தொலைதூரக் காட்சிகளும் அடுத்தடுத்து வைக்கப்படும். இவரது படைப்புக்களில் மலிவான வரலாற்றுப் படங்களான தி லாஸ்ட் டேஸ் ஆஃப் பாம்ப்பி (1959) , தி கொலாசஸ் ஆப் ரோட்ஸ் (1961), மேற்கத்திய பாணியில் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த டாலர் முப்படங்களான எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் (1964), ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் (1965), தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி (1966) ஆகியவையும் ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் த வெஸ்ட் (1968), மெக்சிக்கோவின் புரட்சியாளன் சபாட்டா வாழ்வைத் தழுவிய டக், யூ சக்கர்! (1971) மற்றும் குற்ற நாடக காப்பியமான ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் அமெரிக்கா (1984) ஆகியனவும் அடங்கும்.

இயக்கியத் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படத்தின் பெயர் ஆங்கிலம் இத்தாலியம் அழுகியத் தக்காளிகள் மதிப்பீடு
1959 தி லாஸ்ட் டேஸ் ஆப் பாம்பி The Last Days of Pompeii Gli ultimi giorni di Pompei
1961 தி கொலாசஸ் ஆப் ரோட்ஸ் The Colossus Of Rhodes Il Colosso di Rodi 57%
1964 எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் A Fistful of Dollars Per un pugno di dollari 98%
1965 ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் For a Few Dollars More Per qualche dollaro in piu 94%
1966 தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி The Good, the Bad and the Ugly Il buono, il brutto, il cattivo 97%
1968 ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் தி வெஸ்ட் Once Upon a Time in the West C'era una volta il West 98%
1971 அ பிஸ்ட்புல் ஆப் டைனமைட் A Fistful of Dynamite Giù la testa 90%
1973 மை நேம் இஸ் நோபடி My Name Is Nobody Il mio nome è Nessuno
1984 ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் அமெரிக்கா Once Upon a Time in America C'era una volta in America 89%

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Sergio Leone creatore degli 'spaghetti-western' (இத்தாலியன்)
  2. "I film di Sergio Leone, re dello spaghetti western" (இத்தாலியன்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்சோ_லியோனி&oldid=3512802" இலிருந்து மீள்விக்கப்பட்டது