ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா
பிறப்புஜர்னையில் சிங் பிரார்
(1947-06-02)2 சூன் 1947
ரோடே கிராமம், மொகாலி பஞ்சாப் மாகாணம்
இறப்பு(1984-06-06)6 சூன் 1984
பொற்கோயில், அமிர்தசரஸ்
பணிகாலிஸ்தான் இயக்கம்
சமயம்சீக்கியம்
வாழ்க்கைத்
துணை
பிரிதம் கௌர்
பிள்ளைகள்இசார் சிங் மற்றும் இந்தரஜித் சிங்[1]
காலிஸ்தான் இயக்கத்தின் கொடி

ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா (Sant Jarnail Singh Bhindranwale) (1947 - 1984) என்பதை சுருக்கமாக பிந்தரன் வாலா என்று அழைப்பர். இவரது இயற்பெயர் ஜர்னையில் சிங் பிரார் ஆகும். [2][3])) இவர் சீக்கிய சமய அமைப்புகளில் ஒன்றான தம்தம்மி தக்சல் எனும் அமைப்பின் நிறுவனத் தலைவராவர்.[4][5][6][7]

மது அருந்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், இளைஞர்கள் முடி வெட்டுதல் போன்ற சீக்கிய சமய நெறிகளுக்கு எதிரான போக்குகளை கண்டித்தார்.[8]

காலிஸ்தான் இயக்கம்[தொகு]

இந்திய அரசியல் அமைப்பு சட்டம், பிரிவு 25, சீக்கியர், பௌத்தர், சமணர் ஆகிய சிறுபாண்மை மக்களை இந்து சமயத்துடன் இணைத்து வைத்திருப்பதை பிந்தரன்வாலே கடுமையாக எதிர்த்தார்.

அனந்தப்பூர் சாகிப் தீர்மானத்தின்படி ஆகஸ்டு 1982-இல் சீக்கிய மரபுகளை காக்கும் பொருட்டு விடுதலைக்கான தர்மயுத்தம் (Dharam Yudh Morcha) or (battle for righteousness) எனப்படும் காலிஸ்தான் இயக்கத்தை நிறுவினார். சண்டிகர் நகரத்தை பஞ்சாப் மாநிலத்துடன் இணைக்க போராடினார். [9] மேலும் இறுதியாக பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி இந்திய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டங்களை நடத்தினர்.

புளூஸ்டார் நடவடிக்கை[தொகு]

காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட பஞ்சாப் பிரிவினைவாதிகள் பெருமளவு ஆயுதங்களை அமிர்தசரஸ் நகரத்தின் பொற்கோயிலில் சேர்த்து வைத்ததாக இந்திய அரசு குற்றம் சாட்டியது.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆணையின் படி 3-6 சூன் 1984 அன்று புளூஸ்டார் நடவடிக்கை என்ற பெயரில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பெருமளவு ஆயுதங்களுடன் பிந்தரன் வாலாவுடன் ஒளிந்து கொண்டிருந்த காலிஸ்தான் போராளிகளை வெளியேற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை எடுத்தனர். இந்நடவடிக்கையில் பிந்தரன் வாலா உட்பட காலிஸ்தான் போராளிகள் பலர் இறந்தனர். இராணுவத்தினர் தரப்பில் 83 பேரும்; பொதுமக்கள் தரப்பில் 492 பேரும் இறந்தனர். பலர் படுகாயமுற்றனர். பொற்கோயிலில் ஒளிந்து கொண்டிருந்த 1592 காலிஸ்தான் போராளிகளில் 433 பேர் கைது செய்யப்பட்டனர். [10] [11] [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Sandeep. "Saint Jarnail Singh Bhindranwale (1947–1984)". Sikh-history.com. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 18 March 2007.
  2. Singh, Sandeep. "Jarnail Singh Bhindranwale (1947) பரணிடப்பட்டது 2007-03-24 at the வந்தவழி இயந்திரம்". Sikh-history.com. Retrieved 18 March 2007
  3. Bhindrawale birthday anniversery, huge rally held on February 12 by SAD-A and Sarbat Khalsa supportive organizations
  4. "Bhindranwale firm on Anandpur move". Hindustan Times. 5 September 1983. 
  5. "Bhindranwale, not for Khalistan". Hindustan Times. 13 November 1982. 
  6. "Sikhs not for secession: Bhindranwale". The Tribune. 28 February 1984. 
  7. Joshi, Chand (1985). Bhindranwale: Myth and Reality. New Delhi: Vikas Publishing House. பக். 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7069-2694-3. 
  8. Leveling Crowds: Ethnonationalist Conflicts and Collective Violence in South Asia by Stanley Jeyaraja Tambiah (1996). University of California Press. Page 143-144. ISBN 978-0-520-20642-7.
  9. Akshayakumar Ramanlal Desai (1 January 1991). Expanding Governmental Lawlessness and Organized Struggles. Popular Prakashan. பக். 64–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7154-529-2. https://archive.org/details/nlsiu.342.085.des.5551. 
  10. [http://www.tribuneindia.com/2007/20070320/punjab1.htm Army reveals startling facts on Bluestar
  11. TEMPLE RAID: ARMY'S ORDER WAS RESTRAINT
  12. பொற்கோவில் தாக்குதலில் பிரிட்டன் ஆலோசனை

வெளி இணைப்புகள்[தொகு]