கரீம்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரீம்பூர்
Karimpur

করিমপুর
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்நதியா
அரசு
 • வகைகணக்கெடுப்பில் உள்ள ஊர்
ஏற்றம்15 m (49 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்741152
மக்களவை (இந்தியா) தொகுதிபங்கௌன்
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிகல்யாணி
இணையதளம்nadia.nic.in

கரீம்பூர் (Karimpur) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் அமைந்துள்ள தெகாட்டா உட்கோட்டத்தில் உள்ள கரீம்பூர் 1 சி.டி கட்டிடத்தொகுதியில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.[1]

புவியியல் அமைப்பு[தொகு]

23.97° வடக்கு 88.62° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சார் கரீம்பூர் நகரம் பரவியுள்ளது[2] .

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [3] கரீம்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 9,070 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 75% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 79 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 71 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 10% அளவில் உள்ளனர்.

பொருளாதாரம்[தொகு]

உள்ளூர் வணிகமானது, சணல், வாழை, வெள்ளரி, கத்தரி, வெங்காயம், பிற காய்கறிகள், தானியங்கள் மற்றும் வெற்றிலை இலைகள் ஏற்றுமதியை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்நகரத்தில் கிட்டத்தட்ட 3000 கடைகள், 120 சிறுதொழில் அலகுகள் காணப்படுகின்றன. நகரத்தில் பாரம்பரியமாக தொடரும் சணல் வணிகத்தை இங்கு பெருவாரியாக வாழும் மார்வாரிகள் கட்டுப்படுத்துகின்றனர். இவற்றைத் தவிர, போக்குவரத்து வணிகமும் இங்கு நடைபெற்று வருகிறது.

கல்வி[தொகு]

கரீம்பூர் சகன்னாத் உயர்நிலைப்பள்ளி, கரீம்பூர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் யாம்செர்பூர் பி.என். உயர்நிலைப்பள்ளி உட்பட கரீம்பூரில் 4 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. கரீம்பூர் பண்ணாதேவி இளங்கலை கல்லூரி மற்றும் நமீதா சங்கர் கல்வியியல் கல்லூரி போன்ற இளங்கலை கல்லூரிகள் காணப்படுகின்றன. இவை தவிர ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர்ப் பயிற்சி நிறுவனம் மற்றும் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களின் கற்றல் மையங்கள் பலவும் இங்குள்ளன.

கலாச்சாரம்[தொகு]

புதியவர்கள் வந்து குடியேறியுள்ள மற்ற நகரங்களைப் போல இங்குள்ள மக்களும் ஆச்சாரத்தைக் காட்டிலும் மிகவும் எளிமையாக இருக்கின்றனர். ஆண்டு முழுவதும் கலாச்சார மற்றும் ஆன்மீகத் திருவிழாக்கள் நடந்தவண்ணம் உள்ளன. விசயதசமி திருவிழாவின் இறுதிநாளில் நடைபெறும் படகுச் சவாரி மற்றும் படகுப் போட்டி மிகவும் பிரபலமான ஒரு நிகழ்வு ஆகும். 400 படகுகளுக்கு மேலாகப் போட்டியிடும் இப்போட்டிகள் தற்பொழுது தடைசெய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர சரசுவதி பூசை, காளி பூசை ஆகியனவும் அதிகமான ஆர்வத்தோடு இங்கே கொண்டாடப்படுகின்றன.

உடல்நலம்[தொகு]

கரீம்பூர் நகரில் ஒரு கிராமப்புற மருத்துவமனை மற்றும் பல மருந்தகங்கள் உள்ளன. சில சிறப்பு மருத்துவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் இருந்து வாரத்தின் குறிப்பிட்ட நாளில் வருகை தருகின்றனர். அவசரகால ஆரோக்கிய நிலைமைக்கு இங்கு போதுமான வசதிகள் இல்லை. மாவட்ட மருத்துவமனை இங்கிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் உள்ளது.

தொலை தொடர்பு[தொகு]

இந்தியா-வங்காளம் சர்வதேச எல்லை அருகே 25 கிலோமீட்டர் தொலைவில் கரீம்புர் நகரம் அமைந்துள்ளது. மேற்குவங்க மாநில நெடுஞ்சாலை 11 இவ்வூரின் குறுக்கே செல்கிறது. கிருட்டிணாநகரில் இருந்து கரீம்பூர் செல்லும் பேருந்து வழிச்சாலை தொலைதொடர்புக்கு ஒரு முக்கியமான அடிப்படையாக உள்ளது. பெர்காம்பூரில் இருந்து கரீம்பூர் செல்லும் சாலை அடுத்தப்பக்கமாக உள்ளது இவ்விரு பாதைகளும் சுமார் 2 முதல் 3 மணி நேர பயணத் தொலைவில் உள்ளன

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Wise List of Statutory Towns". Census of India 2001, Urban Frame. Directorate of Census Operations, West Bengal. பார்க்கப்பட்ட நாள் 2007-10-06.
  2. Falling Rain Genomics, Inc - Karimpur
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்பூர்&oldid=3575069" இலிருந்து மீள்விக்கப்பட்டது