ஊழியர் வருங்கால வைப்பு நிதி, இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழிலாளர்கவருங்கால வைப்புநிதி நிறுவனம் (EPFO)
நிறுவுகைபுதுதில்லி, இந்தியா (4 மார்ச்சு 1952 (1952-03-04))
தலைமையகம்14, பிகைஜி காமா பிளேஸ், பவிஷ்ய நிதி பவன்
புதுதில்லி
, India
சேவைகள்வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள்
இணையத்தளம்epfindia.gov.in

ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்த சம்பளத்தில் தொழில்தருநர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்வதாகும். இந்தப்பங்களிப்புப்பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

திட்ட விவரம்[தொகு]

அரசாங்கம், தொழிலாளர்களினதும் ஊழியர்களினதும் எதிர்காலப் பாதுகாப்புக்காக கொண்டு வந்த திட்டம் தான் சேமநல நிதி ஆகும். இந்தியாவில் தொழிலாளர் சேமநல நிதி 1952 -ல் ஆரம்பிக்கப்பட்டது. 1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் இதனோடு சேர்த்து இந்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது . ஊழியர்களின் அடிப்படை சம்பளம்(Basic Salary), அகவிலைப்படியில்(Allowances) 12% தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும் . தனியார் நிறுவனங்களில் பணியாளரிடமிருந்து பிடிக்கப்படும் அதே அளவு தொகையை நிறுவனமும் வழங்கும். இது தவிர, பணியாளர் விருப்பப்பட்டால் இன்னொரு 12% தொகையை கூடுதலாக தொழிலாளர் சேமநல நிதி கணக்கில் பிடிக்கச் சொல்லலாம். ஆனால், இந்த தொகைக்கு இணையாக நிறுவனம் எந்தத் தொகையும் செலுத்தாது.[1]

தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழியர்களின் பங்கான 12%, தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொகைக்கு தற்போது 8.65% வட்டி தரப்படுகிறது. இன்றைய தேதியில் 6,500 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குபவர்களுக்கு தொழிலாளர் சேமநல நிதிப் பிடித்தம் கட்டாயம் பிடிக்க வேண்டும் என்பது சட்டம்.

நிர்வாகம்[தொகு]

தொழிலாளர் சேமநல நிதிக் கணக்குகளை CAG எனப்படும் இந்திய அரசுக் கணக்கு மற்றும் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India)[2] நிருவகிகிறார். ஒன்றிய அரசு ஊழியர்கள், மாநில ஊழியர்கள் ஆகியோரின் சம்பளத்திலிருந்து மாதா மாதம் பொது சேமநல நிதி எனப்படும் GPF சந்தா தொகை பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு கணக்கு எண் வழங்கப்படும். இதற்குக் கணக்குத் துறையின் சுருக்க எழுத்து உண்டு. அவ்வாறு அவர்கள் ஊதியத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகை அவர்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விகடன்.காம்". Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.
  2. http://cag.gov.in/
  3. http://vetrinilavan-politics.blogspot.in/

இவற்றையும் காண்க[தொகு]