1929 லுஃப்தான்சா ஜங்கர்சு ஜி 24 விபத்து

ஆள்கூறுகள்: 51°14′54″N 0°04′07″W / 51.248351°N 0.068482°W / 51.248351; -0.068482
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1929 லுஃப்தான்சா ஜங்கர்சு ஜி 24 விபத்து
விபத்து தொகுப்பு
நாள்1929 நவம்பர் 6
Siteஐக்கிய இராச்சியம் சர்ரே, கிராய்டன், காட்ஸ்டோன்.
51°14′54″N 0°04′07″W / 51.248351°N 0.068482°W / 51.248351; -0.068482
பயணிகள்5
சிப்பந்திகள்3
காயம்1
உயிரிழந்தோர்7
உயிர் தப்பியோர்1
விமான வகைஜங்கர்சு ஜி 24
விமானப் பெயர்ஒபெர்ஸ்க்ளேசின்
இயக்குனர்லுப்தான்சா
Tail numberD-903
புறப்பாடுகிராய்டன் வானூர்தி தளம், சர்ரே, ஐக்கிய இராச்சியம்
வந்தடையும் இடம்ஆம்ஸ்டர்டாம் மாநகர வானூர்தி தளம் நெதர்லாந்து

1929 லுஃப்தான்சா ஜங்கர்சு ஜி 24 விபத்து (1929 Luft Hansa Junkers G.24 Crash) என்பது, ஒரு வானூர்தி விபத்தாகும். இது, 1929-ஆம் ஆண்டு நவம்பர் 6-ம் திகதி புதன்கிழமையன்று, இங்கிலாந்து தென்கிழக்கு பிராந்தியத்தியமான சர்ரே (Surrey) பெருநகரத்தின் அருகிலுள்ள காட்ஸ்டோன் (Godstone) எனும் கிராமப்புறப் பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்ததாக அறியப்பட்டது.[1]

இவ்வானூர்தி விபத்தின்போது சர்வதேச அட்டவணைப்படி ஐக்கிய ராஜ்ய சர்ரே, கிராய்டன் வானூர்தி தளத்திலிருந்து (Croydon Airport) - வானேறி, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் மாநகர வானூர்தி தளத்தை நோக்கி, பயணித்ததாக மூலாதாரம் உள்ளது.[2]

லுஃப்தான்சா ஜங்கர்சு ஜி 24 விபத்து எனும் நிகழ்வில் , வானூர்தி சேவைப் பணியாளர்கள் குழுவின் உறுப்பினர்கள் மூவரும் (3), பயணிகளாக ஐவரும் (5), ஆக எட்டு (8) பேர்கள் பயணித்ததில் இவ்விபத்தில், 7 பேர்கள் கொல்லப்பட்டு, ஒருவர் (1) மட்டும் காயங்களுடன் உயிர்தப்பியதாக சான்றாதாரத்தில் காணப்பட்டது.[3]

வானூர்தி[தொகு]

ஒபெர்ஸ்க்ளேசின் சி/என் 911 (Oberschlesien c/n 911) எனும் பெயருடைய இவ்வானூர்தி, லுப்தான்சா இயக்கியதாகும். இது, ஜங்கர்ஸ் ஜி 24 டி-903 (Junkers G 24 D-903) வகையை சேர்ந்ததாகும்.[4]

பாதிக்கப்பட்டவர்கள்[தொகு]

பாதிக்கப்பட்ட நாட்டவர்கள்.[5]

தேசியம் பணிக்குழுனர் பயணிகள் பலியானோர் காயமடைந்தோர்
செருமனி செருமானியர் 4 4
இங்கிலாந்து இங்கிலாந்தியர் 3 2 1
இந்தியா பிருத்தானிய இந்தியர் 1 1
மொத்தம் 4 4 7 1

மேற்கோள்கள்[தொகு]