சீவகன், பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீவகன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புராஜகிரகம், மகத நாடு
இறப்புராஜகிரகம், மகத நாடு
தேசியம்மகத நாடு
தொழில்ஆயுர்வேத மருத்துவர்

சீவகன் (Jivaka Kumar Bhaccha) கி மு 540-இல் பண்டைய மகத நாட்டின் தலைநகரான ராஜகிரகத்தில் பிறந்தவர். சீவகன், மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன் மற்றும் அஜாதசத்ரு, மற்றும் கௌதம புத்தரின் சமகாலத்தவர் ஆவார். மகத நாட்டின் மன்னர் பிம்பிசாரரிடம் அரச மருத்துவரான சீவகன், ஜீவகராம விகாரையை கட்டி, அதனை பௌத்த சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.[1] புத்தர், தேவதத்தனால் காயமுற்ற போது இந்த மடாலயத்தில் ஒருமுறை சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.[2]

இவர் ஆயுர்வேத மருத்துவத்திலும், யோகக் கலைகளில், தியானத்திலும் வல்லுனர் ஆவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Archaeological Survey of India on-site notice
  2. (in en) Monuments of Bihar. Department of Art, Culture & Youth, Government of Bihar. 2011. பக். Jivakarama vihara entry. https://books.google.com/books?id=B1cdp3hsUXgC. 
  3. https://web.archive.org/web/20140415135348/http://www.palikanon.com/english/pali_names/j/jiivaka.htm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவகன்,_பௌத்தம்&oldid=3926631" இலிருந்து மீள்விக்கப்பட்டது