மகேந்திரகர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 28°02′40″N 76°06′30″E / 28.0444°N 76.1083°E / 28.0444; 76.1083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேந்திரகர் மாவட்டம்
महेन्द्र गढ जिला
மகேந்திரகர்மாவட்டத்தின் இடஅமைவு அரியானா
மாநிலம்அரியானா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நர்னௌல்
தலைமையகம்நர்னௌல்
பரப்பு1,899 km2 (733 sq mi)
மக்கட்தொகை922088 (2011)
மக்கள்தொகை அடர்த்தி486/km2 (1,260/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை14.41%
படிப்பறிவு77.72
பாலின விகிதம்895
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மகேந்திரகர் மாவட்டம் (Mahendragarh district) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நர்னௌல் நகரம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

மகேந்திரகர் மாவட்டத்தின் வடக்கில் ரேவாரி மாவட்டம் மற்றும் பிவானி மாவட்டம்; கிழக்கில் ரேவாரி மாவட்டம் மற்றும் அல்வார் மாவட்டம்; தெற்கில் இராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டம்; மேற்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் சீகர் மாவட்டம் மற்றும் சுன்சுனூ மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

பொருளாதாரம்[தொகு]

வறட்சி மிக்க பகுதியான இம்மாவட்டம், பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கியுள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் மானிய உதவி பெறும் இரண்டு அரியானா மாவட்டங்களில் இதுவும் ஒன்று.[1]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

மகேந்திரகர் மாவட்டம் நர்னௌல், நங்கல் சௌதாரி, கனினா மகேந்திரகர், மற்றும் அதோலி என ஐந்து வருவாய் வட்டங்களை கொண்டது.

இம்மாவட்டம் அதேலி, மகேந்திரகர், நர்னௌல், பிவானி-மகேந்திரகர் என நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இந்நான்கு சட்டமன்ற தொகுதிகளும் பிவானி நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் கீழ் அமைந்துள்ளது. [2]

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 922,088 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.59% மக்களும்; நகரப்புறங்களில் 14.41% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 13.48% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 486,665 ஆண்களும் மற்றும் 435,423 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். 1,899 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 486 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 77.72% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.72 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.57 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 111,181 ஆக உள்ளது. [3]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 913,251 (99.04 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,737 (0.19 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 5,660 (0.61 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 301 (0.03 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 644 (0.07 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 75 (0.01 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 15 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 405 (0.04 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 157. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-18.
  3. [ http://www.census2011.co.in/census/district/223-mahendragarh.html Mahendragarh District : Census 2011 data]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரகர்_மாவட்டம்&oldid=3890724" இலிருந்து மீள்விக்கப்பட்டது