இந்திய வாக்குப் பதிவு கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாக்குப்பதிவு கருவி(இடது), கட்டுப்பாடு கருவி (வலது)

மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் (Electronic Voting Machine) 1999ல்இந்திய பொது மற்றும் மாநிலத் தேர்தல்களில் வாக்குப்பதிவு செய்ய சில பகுதிகளிலும், 2004லிருந்து முழுவதுமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முந்தைய காகித வாக்குச்சீட்டு அமைப்பை ஒப்பிடுகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்களிக்க ஆகும் நேரம் மற்றும் முடிவு அறிவிக்க ஆகும் நேரம் ஆகிய இருநேரங்களையும் குறைக்கிறது. முன்பு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்றது என்ற நீருபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் இருந்தன.[1] பிறகு தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுகளை புறந்தள்ளியது, இருப்பினும் அது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தியது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து வந்த கோரிக்கைகளின் காரணமாகவும். தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை ( VVPAT ) அமைப்புகளை வாக்குப் பதிவு இயந்திரங்களில் அறிமுகப்படுத்த முடிவுசெய்தது. இந்திய பொதுத் தேர்தலில் ஒரு முன்னோடி. திட்டமாக 2014 பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை ( VVPAT ) முறைமையை அறிமுகப்படுத்தியது.[2].

சான்றுகள்[தொகு]